இவருக்கு பந்து வீசறது கிரிக்கெட்ல கஷ்டமான வேலை.. 2 முறை மடக்கலாம் தொடர்ந்து முடியாது – கம்மின்ஸ் பேட்டி

0
36
Cummins

ஐபிஎல் ஏல வரலாற்றில் முதல்முறையாக 20 கோடியை தொட்ட பாட் கம்மின்ஸ் அணியான ஹைதராபாத், 24.75 கோடி என ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச விலைக்கு ஏலம் போன மிட்சல் ஸ்டார்க் அணியான கொல்கத்தா இரண்டு அணிகளும், இன்று ஐபிஎல் தொடரில் பலப்பரீட்சை நடத்தினர்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு, அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரசல் 25 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 64 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியின் காரணமாக ஹைதராபாத் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணிக்கு ஹென்றி கிளாசன் 29 பந்துகளில் 8 சிக்ஸர்கள் உடன் 63 ரன்கள் குவித்தார். ஆனால் ஹைதராபாத் அணி துரதிஷ்டவசமாக கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் கடைசி ஓவருக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய இளம் வேகபந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா எட்டு ரன்கள் மட்டுமே தந்து கொல்கத்தா அணியை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். மேலும் அந்த ஓவரில் ஷாபாஷ் அகமது மற்றும் ஹென்றி கிளாசன் 20 விக்கட்டுகளையும் கைப்பற்றினார். இந்த போட்டியில் ஆட்டம் இழக்காமல் 64 ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட் கைப்பற்றிய ரசல் ஆட்டநாயகன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு பந்து வீசுவது கடினமான வேலை

இந்தப் போட்டியின் முடிவுக்குப் பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறும் பொழுது “இவ்வளவு நெருக்கமான போட்டி நடந்தது மகிழ்ச்சி. ஆனால் இந்த போட்டியில் துரதிஷ்டவசமாக எங்களால் வெல்ல முடியவில்லை. நாங்கள் பந்து வீசிய விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தேன். நாங்கள் ஒரு நல்ல வேலையை செய்ததாக நினைத்தேன்.

- Advertisement -

ஆனால் ரசல் வழக்கம் போல் அவருடைய வேலையை சிறப்பாக செய்தார். அவருக்கு எதிராக உங்களால் முடிந்ததை சிறப்பாக செய்ய நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். ஆனால் அவருக்கு எதிராக பந்து வீசுவது என்பது கிரிக்கெட்டில் கடினமான வேலை. இரண்டுபந்துகள் வித்தியாசமாக முயற்சி செய்து வீசி இருக்கலாம், ஆனால் பொதுவாக அவருக்கு எதிராக பந்து வீசுவது கடினமானது.

இதையும் படிங்க : கடைசி ஓவர்ல ஹர்ஷித் பதட்டமா இருந்தார்.. நான் அவர்கிட்ட இது மட்டும்தான் சொன்னேன் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

கிளாசன் மற்றும் ஷாபாஷ் அற்புதமாக விளையாடினார்கள். நாங்கள் இவ்வளவு தூரம் நெருங்கி வருவோம் என்று யார் நினைத்திருப்பார்கள்? துரதிஷ்டவசமாக எங்களால் போட்டியை வெல்ல முடியாமல் போய்விட்டது. நாங்கள் ஒட்டுமொத்தமாக எல்லா விஷயங்களையும் சேர்த்து சரியாக செய்யாத போதிலும், சிறப்பான அவர்களுக்கு எதிராக அவர்களது மைதானத்தில் நாங்கள் இவ்வளவு தூரம் செயல்பட்டு இருப்பது மகிழ்ச்சி” என்று கூறியிருக்கிறார்.