கடைசி ஓவர்ல ஹர்ஷித் பதட்டமா இருந்தார்.. நான் அவர்கிட்ட இது மட்டும்தான் சொன்னேன் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

0
244
Shreyas

இன்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி ஹை ஸ்கோரிங் பரபரப்பான போட்டியாக அமைந்திருக்கிறது. கடைசி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி ஹைதராபாத் அணியை வென்றது.

டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு அதிரடியாக 25 பந்தில் ரசல் 64 ரன்கள் குவித்தார். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 208 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணியின் தரப்பில் நடராஜன் சிறப்பாக பந்துவீசி 32 ரன்கள் மட்டும் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணிக்கு ரசல் போலவே ஹென்றி கிளாசன் அதிரடியில் அணியை வெற்றியை நோக்கி அழைத்து வந்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹென்றி கிளாசன் 29 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

மேலும் அந்த கடைசி ஓவரை வீசிய இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா, அழுத்தம் மிகுந்த நெருக்கடியான அந்த ஓவரில் ஒட்டுமொத்தமாக 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 8 ரன்கள் மட்டுமே தந்து நான்கு ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார்.

வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன

ஐபிஎல் தொடர் ஆரம்பித்த இரண்டாவது நாளிலேயே ரசிகர்களுக்கு மிகவும் திரில்லிங்கான கடைசிப் பந்து வரை சென்ற ஹை ஸ்கோரிங் போட்டி கிடைத்திருக்கிறது. ஒருவேளை இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று இருந்தால், அந்த அணியின் அதிகபட்ச சேஸ் இதுவாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் இரண்டு தரப்பிலும் அதிரடியாக விளையாடியிருந்தாலும், கடைசி ஓவரை வீசிய ஹர்ஷித் ராணா கதாநாயகன் ஆகியிருக்கிறார்.

- Advertisement -

வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் பொழுது “17ஆவது ஓவரில் இருந்தே எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்துவிட்டது. உண்மையை சொல்வதென்றால் கடைசி ஓவரில் என்ன வேணாலும் நடக்கலாம் என்றுதான் நினைத்தேன். கடைசி ஓவரை வீச வந்த ஹர்ஷித் ராணாவும் கொஞ்சம் பதட்டமாகவே இருந்தார். நான் அவரிடம் தோற்றாலும் பரவாயில்லை என்று கூறி தான் பந்துவீச அனுப்பினேன். முடிந்தவரை அவரை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்தேன்.

இதையும் படிங்க : எல்லா பவுலர்களும் எனக்கு பிளான் வச்சிருக்காங்க.. அந்த பையன் ஓவர் கேட்டு வாங்கினான் – ரசல் பேட்டி

நரைன் மற்றும் ரசல் இருவரும் நிறைய அனுபவம் கொண்டவர்கள். ரசல் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருப்பார். நரைனும் சிறப்பாக செயல்பட்டார். இவர்களை அணியில் வைத்திருப்பது வசதியான ஒன்று. நீங்கள் வெற்றியுடன் தொடரை ஆரம்பிப்பது எப்பொழுதும் உத்வேகம் கொடுக்கும்.நாங்கள் ஒரு அணியாக மேம்படுத்த வேண்டிய பகுதிகள் இருக்கின்றன. குறிப்பாக அதில் ஃபீல்டிங்கும் ஒன்று” என்று கூறியிருக்கிறார்.