மூன்றே வார்த்தை.. ஆஸி இளம் படைக்கு பேட் கம்மின்ஸ் அனுப்பிய சூசகமான வாழ்த்து

0
103
Cummins

2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மிகவும் பிரச்சனைகளை சந்தித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக பழைய உச்சநிலையை எட்டி வருகிறது.

மேலும் ஆஸ்திரேலியா அணியின் இந்த எழுச்சி இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய பிரச்சனைகளை உருவாக்கி இருக்கிறது. தொடர்ச்சியாக மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இந்தியாவுக்கு சிக்கலை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கொடுத்து வருகிறது.

- Advertisement -

2023 ஆம் ஆண்டு மத்தியில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2023 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டி, தற்பொழுது அண்டர் 19 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி என, ஆஸ்திரேலியா இந்திய அணி இடம் இருந்து மூன்று உலகச் சாம்பியன் பட்டங்களை பறித்திருக்கிறது.

பேட் கம்மின்ஸ் தலைமையில் தற்போதைய ஆஸ்திரேலியா அணி பழைய ஆக்ரோஷ முறையை கைவிட்டு, சரியான திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடும் வெல்வதை வழக்கமாக்கி இருக்கிறது.

ஆஸ்திரேலியா அணியின் இந்த அணுகுமுறை அவர்களின் வெற்றிக்கு மிகவும் பங்களிக்க கூடியதாக அமைந்திருக்கிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய வீரர்கள் களத்தில் தங்களது திட்டங்களில் மட்டுமே முழு கவனத்தைச் செலுத்துகிறார்கள். எதிரணியுடன் எந்தவிதமான பழைய வாக்குவாதங்களிலும் ஈடுபடுவது கிடையாது.

- Advertisement -

ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் வரிசையில் தற்பொழுது ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்சும் சிறந்த கேப்டனுக்கு ஆன பட்டியலில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நுழைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று அண்டர் 19 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாட் கம்மின்ஸ் “புத்திசாலித்தனமான வேலை தோழர்களே” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : “சர்பராஸ் கானை விட தம்பி முசிர் கான்தான் பெஸ்ட்” – இந்திய முன்னாள் ஓபனர் கருத்து

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் எப்படி புத்திசாலித்தனமாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றினார்களோ, அதேபோல் அண்டர் 19 உலகக் கோப்பை தொடரிலும் செய்திருக்கிறார்கள் என்பதையே பாட் கம்மின்ஸ் சூசகமாக கூறியிருக்கிறார்.