இந்திய அணியில் சத்தியமா என்ன நடக்குதுனே புரியல? வெளுத்து வாங்கிய முன்னாள் சிஎஸ்கே வீரர்

0
51

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தொடரை வென்று விடுவார்கள்.

இந்த நிலையில் இந்திய அணியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்கீவ் பட்டேல் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் தான் விளையாடுகிறது.

- Advertisement -

அடுத்த ஒரு மாதத்திற்கு நாம் டி20 போட்டிகளில் தான் விளையாடப் போகிறோம். இப்படிப்பட்ட சூழலில் ஏன் விராட் கோலியின் ரோகித் சர்மாவும் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை. இந்திய அணியில் தற்போது ரோகித் சர்மா,சுப்மன் கில், விராட் கோலி ஆகிய டாப் 3 வீரர்களுடைய இடம் தான் முடிவாகி இருக்கிறது.

பேட்டிங் வரிசையில் நம்பர் 4 மற்றும் 5 மற்றும் ஆறாவது இடத்தில் யார் விளையாடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படி நிலைமை இருக்க இஷான் கிசனை ஏன் சம்பந்தமே இல்லாமல் தொடக்க வீரராக களம் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இதேபோன்று சஞ்சு சாம்சன் ஏன் மூன்றாவது இடத்தில் விளையாடுகிறார் என்றும் தெரியவில்லை. மூன்றாவது இடத்தில் விராட் கோலி தான் ஏற்கனவே இருக்கிறார் இதனால் நீங்கள் சஞ்சு சாம்சனை நான்காவது வீரராக களம் இறக்கி பார்த்திருக்கலாம் அல்லவா? இதேபோன்று இஷான் கிஷனை நடுவரிசையில் களம் இறக்கி அவர் எப்படி விளையாடுகிறார் என்று நீங்கள் பார்த்திருக்கலாம்.

- Advertisement -

அடுத்த ஒரு மாதத்தில் விராட் கோலியும் ரோகித் சர்மாவும் ஓய்வில் தான் இருக்கப் போகிறார்கள். அப்படி இருக்கும்போது இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் அவர்களை விளையாட வைக்க வேண்டும். கடைசி ஒரு நாள் போட்டியிலாவது இந்திய அணி அவர்களுக்கென உரிய இடத்தில் வீரர்களை களம் இறக்க வேண்டும் என நினைக்கிறேன்.இஷான் கிஷனை நடுவரிசையில் விளையாட வையுங்கள் ஏனென்றால் இந்தியாவில் இடது கை பேட்ஸ்மேன்கள் நடு வரிசையில் இல்லை என பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.