இந்திய அணியின் தோல்விக்கு சூசகமாக ட்வீட் போட்ட பாகிஸ்தான் பிரதமர்!

0
698
Pakistan pm

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று மிகவும் ஒரு சோகமான நாளாக அமைந்தது. இந்திய அணி எட்டாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டாவது அரையிறுதி போட்டியில் அடிலைடு மைதானத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து மோதியது!

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வென்று பந்துவீச்சை இங்கிலாந்து அணி தேர்வு செய்தது. இதற்கு அடுத்த களம் இறங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா மட்டுமே சரியாக விளையாட 168 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இந்த டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதும் இந்திய துவக்க ஆட்டக்காரர்களின் பேட்டிங் சரியில்லை. அவர்கள் உண்டாக்கும் அழுத்தம் எல்லோருக்கும் பரவ, முடிவுகள் தவறாக வருகிறது!

இந்த நிலையில் இது போதாது என்று இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து வீரர்கள் ஒரு விக்கெட்டை கூட தராமல் இலக்கை எட்டி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்கள்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி வருகின்ற 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணியை மெல்போன் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் யார் வென்றாலும் இரண்டாவது முறையாக கோப்பையை வென்று ஏற்கனவே இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிவுடன் சாதனையை பகிர்ந்து கொள்வார்கள்!

- Advertisement -

இந்திய அணியின் இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் பிரதமர் ஷேபாஸ் ஷரிப் தனது ட்விட்டர் பக்கத்தில்
” எனவே இந்த ஞாயிறு இது. 152/0 170/0″ என்று பதிவிட்டு இருக்கிறார். அதாவது டி20 உலகக் கோப்பை தொடரில் கடந்த முறை பத்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி இந்தியா அணியை வென்றது. தற்பொழுது 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியும் அப்படி வென்று இருப்பதைச் சூசகமாக அப்படி குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!