14 நாளில் பறிபோன பாகிஸ்தானின் நம்பர் 1 இடம்.. ஆஸி அட்டகாசம்.. இந்தியாவின் தற்போதைய இடம்.. முழு விபரம்.!

0
637
ODI

இந்தியாவில் அடுத்த மாதம் அக்டோபர் ஐந்தாம் தேதி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்க இருக்கின்ற காரணத்தினால், கிரிக்கெட் உலகம் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தைச் சுற்றிச் சுழல ஆரம்பித்திருக்கிறது!

தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்பாக பயிற்சி பெறும் விதமாக, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா மண்ணில் விளையாடி வருகின்றன.

- Advertisement -

மேலும் இந்தத் தொடரை முடித்துக் கொண்டு இந்தியா வந்து, இந்தியாவுடன் மூன்று கோட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் நான்கு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து மண்ணில் தற்பொழுது விளையாடி வருகின்றன.

இந்தப் புறமாக எடுத்துக் கொண்டால், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் இலங்கை,ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகளும் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன.

- Advertisement -

இப்படி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளில் ஒன்பது அணிகள் அதற்கான தயாரிப்புகளில் மிகவும் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றன. நெதர்லாந்து அணி மட்டுமே அதற்கான போட்டிகள் இல்லாமல் இருந்து வருகிறது.

சமீபத்தில் இலங்கை மண்ணில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடியது. இந்தத் தொடரை முழுவதுமாக கைப்பற்றிய பாகிஸ்தான் அணி, ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தியது.

தற்பொழுது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி, இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று, பாகிஸ்தான் அணியை கீழே இறக்கி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை முதல் 10 அணிகள் :

121 – ஆஸ்திரேலியா
120 – பாகிஸ்தான்
114 – இந்தியா
106 – நியூசிலாந்து
99 – இங்கிலாந்து
97 – சவுத் ஆப்பிரிக்கா
92 – பங்களாதேஷ்
92 – ஸ்ரீலங்கா
80 – ஆப்கானிஸ்தான்
68 – வெஸ்ட் இண்டீஸ்