உலக கிரிக்கெட்

32 பந்து 63 ரன்.. கம்ரான் அதிரடி ஆட்டம்.. திரும்ப கிளாசனின் போராட்டம் வீண்.. 2வது ஒருநாள்.. பாக் அபார வெற்றி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.

- Advertisement -

இரண்டாவது போட்டியிலும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் இரண்டாவது ஒருநாள்

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும் மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 95 பந்துகளை எதிர்கொண்டு ஏழு பவுண்டரி மூலம் 73 ரன்கள் குவித்தார்.

அவரோடு பார்ட்னர்ஷிப் அமைத்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் சிறப்பாக விளையாடி 82 பந்துகளை எதிர்கொண்டு ஏழு பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 80 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு சல்மான் ஆகா 33 ரன்னில் வெளியேற, இறுதிக்கட்டத்தில் கம்ரான் குலாம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 32 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு நான்கு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்சர் என 63 ரன்கள் குவித்ததால் பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ஹென்றிக் கிளாசன் போராட்டம் வீண்

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி தென்னாபிரிக்க அணி களம் இறங்கியது. தென்னாப்பிரிக்க அணியில் சீரான இடைவெளியில் தொடக்கம் முதலே விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது. கேப்டன் பவுமா 12 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டோனி டி சார்ஜி 34 ரன்னில் நடையை கட்டினார். அவருக்குப் பிறகு வான்டர் டசன் 23 ரன், மார்க்ரம் 21 ரன்னில் வெளியேற அதற்குப் பிறகு கிளாசன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 74 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 97 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க:இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட இதுதான் ஒரே வழி.. ஆனா அதுக்கும் பிசிசிஐ ஒத்துக்காது – பாக் அஹமடது ஷெஷாத் கிண்டல்

இருப்பினும் பின்னால் வந்த வீரர்கள் இவருக்கு சரியான ஒத்துழைப்பு தர மறுக்க, தென்னாபிரிக்க அணி இறுதியாக 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 81 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கம்ரான் குலாம் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -
Published by