சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் இந்த தொடரில் விளையாட அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
ஆனால் இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்க சில பிரச்சனைகள் உள்ள நிலையில் அதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் தொடக்க வீரர் அகமது ஷெஷாத் சில எதிர்வினையாற்றும் கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்
மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்த உள்ளது. கடந்த முறை பாகிஸ்தான் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியதால் இந்த தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்றது. இந்த நிலையில் 2008ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானில் வந்து விளையாடுவதை முற்றிலுமாக தவிர்த்தநிலையில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளை மட்டும் ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை வைத்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்க, பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் இந்திய அணி இங்கு வந்து விளையாட வேண்டும் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்த பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷெஷாத் இந்த பிரச்சனைக்கு கிண்டலடிக்கும் விதமாக தீர்வு ஒன்றை தெரிவித்து இருக்கிறார்.
ஐசிசி பின் வாங்க முடியாது
இதுகுறித்து அவர் கூறும் போது “இரு நாட்டின் எல்லையில் ஒரு மைதானம் அமைக்க வேண்டும். அதன் ஒரு வாயில் இந்தியாவிலும் மற்றொரு வாயில் பாகிஸ்தானிலும் திறக்க வேண்டும். இந்தியாவின் வீரர்கள் அங்கிருந்து செல்லலாம் எங்கள் வீரர்கள் இங்கிருந்து செல்லலாம். ஆனால் மீண்டும் இது இந்திய அரசாங்கம் மற்றும் பிசிசிஐக்கு பிரச்சனை ஏற்படும் என்று நினைக்கிறேன். உங்கள் வீரர்கள் எங்கள் பக்கத்தில் பீல்டிங் செய்ய வரும் போது அதற்கு விசா கொடுக்க மாட்டோம் என்று கூறுவார்கள்.
இதையும் படிங்க:47 பந்து 77 ரன்.. மந்தனா படைத்த அபார 2 சாதனை.. வெஸ்ட் இண்டீஸ் 3வது டி20.. இந்திய அணி சிறப்பான வெற்றி
இந்தியாவை நடத்தும் பொன்னான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்தது. அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் 2021ஆம் ஆண்டு பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் என்று கையெழுத்துள்ளன. எனவே இதிலிருந்து ஐசிசி பின்வாங்க முடியாது.நான் நினைக்கும் வாய்ப்பை பிசிபி தவற விட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தானுக்கு எப்போதாவது வரும் என்பதை மறந்து விட வேண்டும் ஐசிசி நிகழ்வின் மூலமாக இந்திய அணியை இங்கு கொண்டு வர முடியும்” என்று கூறியிருக்கிறார்.






