“பாகிஸ்தான் செமி பைனல் வரனும்.. அப்போதான் இது நடக்கும்..!” – சவுரவ் கங்குலி வித்தியாசமான பேச்சு!

0
359
Ganguly

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் உலகக் கோப்பை தொடரில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்திருக்கிறது.

தற்பொழுது விளையாடிய ஏழு போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்ற இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ஏழு போட்டிகளில் ஆறு போட்டிகளை வென்ற தென் ஆப்பிரிக்கா புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்த இரண்டு அணிகளும் மிகச் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வருகின்றன. எதிரணிகளை இவர்கள் எந்த இடத்திலும் மீளவே விடாமல் அடித்து ஜெயித்து வருகிறார்கள். பெரும்பாலும் ஆட்டங்கள் ஒருதலைப் பட்சமாகவே முடிகிறது.

எனவே இப்படி சிறப்பாக இருக்கும் இரண்டு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு இயல்பாகவே எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. மேலும் இந்த போட்டியில் வெல்பவர்கள் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தொடர்வார்கள். இதன் காரணமாக அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கும் சூழ்நிலையை தவிர்ப்பார்கள்.

மேலும் இந்த இரண்டு அணிகளையும் எடுத்து பார்க்கும் பொழுது ஒரு மிக முக்கியமான உண்மை இருக்கிறது. என்னவென்றால் இந்த இரண்டு அணியுமே ஐந்து முழுமையான பந்துவீச்சாளர்களை கொண்டு களமிறங்குகிறது. எனவே இன்றைய நாளில் எல்லா துறைகளிலும் போட்டி இருக்கும்.

- Advertisement -

போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த டெம்பா பவுமா தங்களை சோக்கர் அழைப்பதை குறித்து மிகவும் வருத்தப்பட்டார். அது குறித்த கேள்விகளுக்கு அவருடைய பதில் மிகவும் காட்டமாகவே இருந்தது.

இது குறித்து அவர் பேசும் பொழுது “சோக்கர் என்று சொல்கிறார்கள். இதற்கு என்ன மாதிரியான பதில் சொல்வது என்றே தெரியவில்லை. நாளை நாங்கள் ஸ்டக் ஆகாமல் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால், இந்தியா தோல்வி அடைந்தால் அவர்களை சோக்கர் என்று சொல்வீர்களா?

சிறந்த பார்மில் இருக்கும் இரண்டு அணிகள் மோதிக் கொள்கிறது. யார் தங்களுடைய மொமெண்டத்தை முதலில் இழக்கிறார்கள், யார் முதலில் உடைகிறார்கள் என்பதை பொறுத்து வெற்றி தோல்வி மாறும்.

நாங்கள் பொதுவாகவும் இந்த உலக கோப்பையிலும் இப்படியான பல தருணங்களை பார்த்து வந்த அனுபவம் இருக்கிறது. எங்களால் முடிந்தவரை இதை சிறப்பாக சமாளிப்போம்.

நாங்கள் உலகக் கோப்பையின் தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு போட்டியாக விளையாட்டை விளையாட்டாக அணுகுவது என்று முடிவு செய்தோம். நாங்கள் அதன்படிதான் விளையாடி வந்திருக்கிறோம்.

நாங்கள் தொடர்ச்சியாக அண்டர்டாக்ஸ் என்று இருந்து வருவது வருத்தமான ஒன்று. எங்களைப் பொறுத்தவரை எல்லாமே அப்படியேதான் இருக்கிறது. நாங்கள் எதையும் வித்தியாசமாக பார்க்கவில்லை. நாங்கள் ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு போட்டியாக எடுத்துக் கொள்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!