“பாகிஸ்தான் ரன் அடிக்க பெரிய முயற்சி செய்யல.. நான் அதனால இப்படி பிளான் பண்ணிக்கிட்டேன்!” – குல்தீப் யாதவ் மாஸ் ஸ்பீச்!

0
417
Kuldeep

இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மோதிக் கொள்ளும் மிக முக்கியமான போட்டி இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மதியம் முதல் துவங்கி நடைபெறுகிறது!

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாசில் வெற்றி பெற்றார். அவர் இந்திய அணி முதலில் ஃபீல்டிங் செய்யும் என அறிவித்தார். பாகிஸ்தான் அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை. இந்திய அணியில் இசான் கிஷான் இடத்தில் கில் வந்திருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான அணி முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது விக்கெட்டை 73 ரன்கள் எடுத்திருந்தபொழுது விட்டது. இந்த நிலையில் பாபர் மற்றும் ரிஸ்வான் இருவரும் சேர்ந்து அணியை மீட்டனர்.

இவர்கள் இருவரும் அணியின் ஸ்கோர் 155 ரன்கள் என 30 ஆவது ஓவருக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் பாபர் அசாம் முகமது சிராஜ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

20 ஓவர்களில் இருந்து 30 ஆவது ஓவர் வரை ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் பாகிஸ்தான் அணியை ரன்கள் அடிக்க விடாமல் பெரிய அழுத்தத்தை உருவாக்கினார்கள். இதன் காரணமாக சிராஜ் வந்ததும் அவரை அடிக்கப் போய் பாபர் அசாம் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்த இடத்திலிருந்து மேற்கொண்டு 36 ரன்கள் சேர்த்து 191 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட் இழந்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் சர்துல் தாக்கூர் இல்லாமல் ஹர்திக் பாண்டியா உட்பட மற்ற ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

பாபர் அசாம் விக்கெட்டை இழந்ததும், சவுத் ஷகில் மற்றும் இப்திகார் அகமத் இருவரது விக்கட்டையும் குல்தீப் யாதவ் கைப்பற்றி அசத்தினார். இதற்கு அடுத்து பும்ரா முகமது ரிஸ்வான் மற்றும் சதாப் கான் இருவரது விக்கெட்டை கைப்பற்றினார். இதற்கு அடுத்து ரவீந்திர ஜடேஜா இரண்டு, மேற்கொண்டு ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட் என எடுக்க பாகிஸ்தான் அணி சுருண்டு விட்டது.

இந்த நிலையில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் பேட்டியளிக்கும் பொழுது “நான் இந்த உலகக் கோப்பை தொடரை ரசித்து வருகிறேன். இந்த ஆடுகளத்தில் எங்கு பந்து வீசுவது என்று எனக்கு நன்றாக தெரியும். உண்மையை சொல்வது என்றால் இந்த ஆடுகளம் பந்து வீசுவதற்கு கடினமானது. மேலும் மெதுவாகவும் இருந்தது.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரன் அடிப்பதற்கு பெரிய முயற்சிகள் எதையும் செய்யவில்லை. இதனால் நான் அடிப்பதற்கு இடம் தராமல், வேகத்தை மட்டும் மாற்றி மாற்றி வீசிக் கொண்டு இருந்தேன்.

ரிஸ்வான் என்னை ஸ்வீப் செய்ய முயற்சி செய்யவில்லை. அவர் எப்படியும் ஒரு மோசமான ஷாட் விளையாடுவார் என்று நான் நம்பினேன். அதேபோல் ஷகில் நிறைய ஸ்வீப் மற்றும் பெடல் ஷாட்கள் விளையாடுவதை நாம் பார்த்து வருகிறேன்.

எனவே நான் அவருக்கு பந்தை விக்கெட் டூ விக்கெட் வைக்க விரும்பினேன். அதிர்ஷ்டவசமாக நான் அவருடைய விக்கெட்டை கைப்பற்றினேன். இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு முன் விளையாடுவது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும் மிக உற்சாகமாக இருக்கிறது. நான் என் பந்துவீச்சை ரசித்தேன்!” என்று கூறியிருக்கிறார்!