“பாகிஸ்தான் இந்திய அணியை பார்த்து திருந்தனும்.. அவங்க இப்படி பண்ண மாட்டாங்க” – சல்மான் பட் அதிரடி!

0
243
Butt

பாகிஸ்தானின் மூன்று வடிவ கிரிக்கெட் அணிகளுக்கும் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகிக் கொண்ட பிறகு, முதல் முறையாக ஷான் மசூத் தலைமையில் ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய பாகிஸ்தான், தொடரை முழுவதுமாக இழந்து படுதோல்வி அடைந்து நாடு திரும்பி இருக்கிறது. இந்தத் தொடரில் 27 வயதான வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் அமீர் ஜமால் சிறப்பாக செயல்பட்டார்.

மேலும் இந்த தொடருக்குப் பிறகு ஷாகின் ஷா அப்ரிடி தலைமையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் துணை கேப்டனாக முகமது ரிஸ்வான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும் பாபர் அசாமுக்கு நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு தரப்பட உள்ளதாகவும், அதே சமயத்தில் அவரை அணியில் தேர்வு செய்தோம் உள்ளார்கள்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்ற ஆசிய கோப்பை வரையில் பாகிஸ்தான் அணி மிகவும் வலிமையான அணியாக பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியில் வந்து விளையாட ஆரம்பித்ததும், அவர்களது பலவீனங்கள் அனைத்தும் அம்பலப்பட்டது. இதற்குப் பிறகு அவர்களுடைய கிரிக்கெட் அமைப்பு மற்றும் அணியில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கிறது.

தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சல்மான் பட் தன்னுடைய கருத்துக்களை மிகவும் தைரியமான முறையில் முன்வைத்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “தயவுசெய்து அமீர் ஜமாலை இன்னும் சில போட்டிகள் விளையாட விடுங்கள். அவர் இன்னும் ஹர்திக் பாண்டியா பென் ஸ்டோக்ஸ் ஆகிவிடவில்லை. ஒரு வீரர் ஏதாவது நல்லதாக செய்தால் அவர் எல்லா விஷயத்திலும் அப்படியே செய்வார் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி அவர் செய்யாவிட்டால் உடனே அவரை அணியை விட்டு தூக்க வேண்டும் என்று சொல்கிறோம். இவருக்கு கொஞ்சமாவது நிலை தன்மையை காட்ட ஒரு வருடமாவது நேரம் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஓய்வெடுக்க விரும்பும் வீரர்களை எப்பொழுதும் அணியில் தேர்வு செய்வது கிடையாது. அவர்கள் தங்கள் அணியை இதற்கு ஏற்ற முறையில் உருவாக்குகிறார்கள். பெரிய வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்றால் அவர்களை அழைக்க மாட்டார்கள்.

ஆனால் பாகிஸ்தானுக்கு இந்த தெளிவு கிடையாது. இவர்கள் எல்லோரையும் மகிழ்ச்சி படுத்த நினைக்கிறார்கள். இவர்களில் யாராவது ஒருவர் தேர்தலில் போட்டியிட்டால் நிறைய வாக்குகள் வாங்கலாம் என்று எல்லோரையும் அனுப்பி இருக்கிறார்கள். பாபர் அசாமுக்கு ஓய்வு தருவதாக இருந்தால் அவரை அணியில் தேர்வு செய்யக்கூடாது.

என்னைப் பொறுத்தவரை முகமது ரிஸ்வான் நீண்ட காலத்திற்கு முன்பு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக வந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது துணை கேப்டனாக வந்திருக்கிறார். அவர் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் பிஎஸ்எல் லீக் தொடர்களில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவரே கேப்டனாக வரவேண்டும்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஷான் மசூத் கேப்டனாக மோசமாக செயல்படவில்லை. அவர் மிகவும் ஒழுக்கமானவராக இருந்தார். கேப்டனாக பந்துவீச்சு மாற்றங்கள் மற்றும் உடல் மொழியில் இருந்த நம்பிக்கை என நன்றாகவே செயல்பட்டார்” என்று கூறியிருக்கிறார்!