இந்திய கிரிக்கெட்

துபாய்ல எங்களுக்கு இந்த அட்வான்டேஜ் இருக்கு.. ரோகித் விராட்டுக்கு இது ஒரு பொருட்டே கிடையாது – பகார் ஜமான் பேட்டி

பாகிஸ்தான் அணி வீரர் பகார் ஜமான் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் மூவரிடமும் ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து ரசிகர்கள் விமர்சனம் செய்யக்கூடாது என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இந்த நிலையில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய் மைதானத்தில் நடத்தப்படுகின்றது. தற்போது இந்த மைதானத்தில் இந்தியாவை விட தங்களுக்கு என்ன மாதிரியான கூடுதல் அனுகூலம் இருக்கும்? என்பது குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.

இவர்களை இப்படித்தான் பார்க்க வேண்டும்

தற்போது பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி அணியில் நீண்ட நாட்களாக சேர்க்கப்படாமல் இருந்து வந்த பகார் ஜமான் சேர்க்கப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டது தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறைமுகமான நடவடிக்கை எடுத்து நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இது குறித்து பேசி இருக்கும் பகார் ஜமான் கூறும் பொழுது ” விராட் கோலியின் ரோஹித் சர்மாவும் எப்பொழுதும் மேட்ச் வின்னர்கள் ஆகவே அவர்கள் விளையாடிய போட்டிகளின் மூலமாக இருந்து வந்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் அடிக்கடி அவர்கள் அதைச் செய்திருக்கிறார்கள். அவர்களை மேட்ச் வின்னர்களாக பார்ப்பதை உங்களால் தடுக்க முடியாது. அவர்களுடைய பாரம்பரியம் மற்றும் கிளாஸ் ஆகியவற்றை நீங்கள் பார்க்க வேண்டும்”

- Advertisement -

துபாய் மைதானத்தில் எங்களுக்கு கிடைக்கும் அட்வான்டேஜ்

“விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் பாபர் அசாம் மூவர் ஃபார்ம் எப்படி இருக்கிறது என்பது எங்களுக்கு இப்பொழுது ஒரு பொருட்டே கிடையாது. அவர்கள் அணிக்கு பல வெற்றிகளை கொண்டு வந்த மேட்ச் வின்னர்கள். அவர்களின் தற்போதைய பார்ம் எங்களுக்கு ஒரு பிரச்சினையே கிடையாது. நாங்கள் அவர்களுடைய திறமையின் அடிப்படையிலேயே அவர்களை மதிப்பிடுகிறோம்”

இதையும் படிங்க : ரோகித் கேப்டன்ஷியில் விராட் விளையாட விரும்பல.. இதை நான் சொன்னேனா? – பார்த்திவ் படேல் விளக்கம்

“இந்தியாவில் விளையாடும் பொழுது பொதுவாக இந்தியாவுக்கு கூடுதலான ரசிகர்களின் ஆதரவு இருக்கும். தற்போது நாங்கள் இந்திய அணிக்கு எதிராக துபாய் மைதானத்தில் விளையாடுகிறோம். இங்கு இந்திய அணியை விட எங்களுக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு மிக அதிகமாக இருக்கும். இதைப் பொறுத்தவரையில் இது சாதகமான விஷயம்தான். ஆனால் ஒரு அணியாக எப்படி சேர்ந்து விளையாடுகிறோம் என்பதுதான் முக்கியமானது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Fakhar Zaman

Recent Posts