இந்திய அணி நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா கேப்டன்ஷியில் விளையாட விரும்பவில்லை என தான் கூறினேனா என்று இந்திய முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்திய அணி உள்நாட்டில் நியூசிலாந்து மற்றும் வெளிநாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர்களை இழந்தது பெரிய அளவில் விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது. மேலும் இந்திய அணியை சுற்றிலும் நிறைய குழப்பமான அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே பரவிய தவறான தகவல்
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் வந்ததை இந்திய சீனியர் வீரர்கள் விரும்பவில்லை என்றும், இதன் காரணமாக விராட் கோலி தலைமையில் சில இளம் வீரர்கள் சேர்ந்து கொண்டு வேண்டுமென்றே மோசமாக விளையாடி கம்பீர் பதவிக்கு ஆபத்தை உருவாக்குகிறார்கள் என்றும் சிலர் பேசி வந்தார்கள்.
இந்த நிலையில் ரோகித் சர்மா டெஸ்ட் கேப்டனாக இருக்கின்ற காரணத்தினால் விராட் கோலி வேண்டுமென்றே மோசமாக விளையாடி ஆட்டம் இழப்பதாகவும், டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் ரோகித் சர்மா தனக்கு நிகராக விராட் கோலி இப்படி செய்வதாகவும் பார்த்திவ் படேல் பெயரில் செய்திகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தின.
பார்த்திவ் படேல் தந்த விளக்கம்
முதலில் வெளியான தவறான தகவலில் “ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு சமமாக சிறப்பாக விளையாடியிருக்கிறார். இதன் காரணமாக விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் ரோகித் சர்மா தனக்கு நிகராக எங்கும் வந்து விடக்கூடாது என மோசமாக விளையாடுகிறார்” என்று பார்த்திவ் படேல் கூறியதாக செய்திகள் வந்தது.
இதையும் படிங்க : பிசிசிஐ உத்தரவு.. இங்க பிரச்சனை விராட் ரோகித்தது தான்.. மத்த பசங்க கிளம்பிட்டாங்க – ஆகாஷ் சோப்ரா பேச்சு
தற்போது இதற்கு விளக்கம் அளித்திருக்கும் பார்த்திவ் படேல் கூறும் பொழுது “நான் இப்படி எதுவும் சொல்லவில்லை. இது உண்மையும் கிடையாது. தயவு செய்து உங்களுக்கு கிடைக்கும் செய்திகளை ஆதாரத்தை ஆராய்ந்து பாருங்கள். ஏனென்றால் உங்களுக்கு தொடர்ந்து தவறான தகவல்களை தந்து வருகிறார்கள். இது முற்றிலும் போலியான ஒரு செய்தி” என்று கூறியிருக்கிறார்.






