பாகிஸ்தான் அணி இமாலய வெற்றி.. இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்

0
2167

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடி வந்தது. முதல் டெஸ்ட் போட்டியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த திங்கள்கிழமை கொழும்புவின் எஸ்எஸ்சி மைதானத்தில் துவங்கியது.

டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு அனைத்த விக்கெட்களையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணி மிகச் சிறப்பாக விளையாடி 576 ரன்களுக்கு 5 விக்கெட் களை மட்டுமே இழந்து டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் மிகச் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் எடுத்தார். அவர் 201 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

மேலும் பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டரான சல்மான் அகா சிறப்பான சத்தத்தை பதிவு செய்து 132 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் எடுத்த சவூத் ஷக்கீல் 57 ரன்களும் ஷான் மசூத் 51 ரன்களும் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் சர்ஃபாராஸ் அஹமத் காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக களம் இறங்கிய முகமது ரிஸ்வான் 50 ரன்களும் எடுத்தனர்.

என்னைத் தொடர்ந்து 410 ரன்கள் பின்தங்கிய நிலையில் களம் இறங்கிய இலங்கை அணி நான்காம் நாள் ஆட்டம் முடிவதற்கு முன்பாகவே 188 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் மட்டும் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார் .

இதன் மூலம் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்தது . இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது . இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய நுமான் அலி 70 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார், அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் நஷீம் ஷா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி புதிய சாதனையை படைத்திருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இந்த வெற்றி தான் வெளிநாட்டு மைதானங்களில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி பெற்ற வெற்றியாகும்.

- Advertisement -

மேலும் இந்த வெற்றியின் மூலம் 2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் அணி இரண்டு வெற்றிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா அணி இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது . வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக டிராவில் முடிவடைந்ததால் இந்தியா இரண்டாவது இடத்திற்கு பின் தங்கியிருக்கிறது .

பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வெற்றி பெற்றதால் 100% வெற்றி மற்றும் 24 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்திய அணி 66.67% வெற்றிகளுடன் பதினாறு புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் ஆசஸ் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியா 54.17% வெற்றிகளுடனும் 26 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.