உம்ரான் மாலிக் மயங்க் யாதவ் 2 பேரும் இத செய்தே ஆகனும்.. இல்லனா முடிச்சு விட்டுருவாங்க – பிரையன் லாரா அறிவுரை

0
2462
Mayank

நடப்பு ஐபிஎல் தொடரில் மணிக்கு 156.6 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி 21 வயதான இந்தியாவின் வயது மயங்க் யாதவ் பலரது கவனத்தையும் கவர்ந்திருந்தார். அதே சமயத்தில் இவருக்கு முன்பாகவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உம்ரான் மாலிக் வேகத்தால் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தார். இவர்கள் இருவர் குறித்தும் லெஜெண்ட் பிரையன் லாரா முக்கியமான கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.

மூன்றாண்டுகளுக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்து, நடராஜன் காயமடைந்த காரணத்தினால் விளையாடும் வாய்ப்பை பெற்ற உம்ரான் மாலிக், இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளராக மாறினார். ஐபிஎல் தொடரில் மணிக்கு 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி இருக்கிறார். இவர்தான் இந்தியாவில் அதிக வேகத்தில் வீசிய பந்துவீச்சாளர்.

- Advertisement -

இதற்குப் பிறகு உடனே இவருக்கு இந்திய அணிகளும் அதிவேகத்தின் காரணமாக வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் வேகம் மட்டுமே இருக்கும் இவரிடம் நிலையான செயல்பாடு இல்லை. எனவே இவரால் இந்திய அணியில் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் பெரிய வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.

தற்பொழுது மயங்க் யாதவ் அதிவேகமாக பந்து வீசுவதோடு, நல்ல கட்டுப்பாட்டோடும் துல்லியத்துடனும் பந்து வீசுகிறார். இதன் காரணமாக இவர் இந்திய அணியில் வெகு சீக்கிரத்தில் விளையாடுவதோடு, உலக கிரிக்கெட்டில் சிறந்த வேகப் பந்துவீச்சாளராகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

இவர்கள் இருவர் குறித்தும் பேசியுள்ள பிரையன் லாரா கூறும்பொழுது “முதலில் உம்ரான் மாலிக்குக்கு இன்னும் நம்பிக்கைக்குரிய ஒரு கிரிக்கெட் வாழ்க்கை இருக்கிறது. ஆனால் உங்கள் சொந்த பலத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்பொழுது மயங்க் யாதவ் புதிய பந்துவீச்சாளர். நல்ல பவுன்ஸ் உடன் பந்தை நகர்த்துகிறார். இவர் புதிய வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் பேட்ஸ்மேன்களுக்கு இவரை கணிப்பது கடினமாக இருக்கும். ஆனால் நாளாக நாளாக திட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இவருக்கு எதிராக வியூகங்கள் வகுக்கப்பட்டு விடும். எனவே நாளுக்கு நாள் நாம் முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : மேட்ச்க்கு குடும்பம் முழுசா வந்தாங்க.. ஆனா சிஎஸ்கேவுக்கு சப்போர்ட் பண்ணாங்க – வருண் சக்கரவர்த்தி சுவாரசிய பேட்டி

என்னைப் பொறுத்த வரையில் அதிசிறந்த பந்துவீச்சாளரான பும்ராவின் ஆலோசனைகளை பெறுவதன் மூலம், இவர்கள் தங்களை முன்னணியில் வைத்துக் கொள்ள முடியும். மேலும் ஐபிஎல் தொடரில் உலகத் தரமான வேகப்பந்துவீச்சாளர்களுடன் தொடர்பு கொள்வதின் மூலம், நிறைய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். மயங்க் யாதவ் உண்மையிலேயே சிறந்த வேகப்பந்துவீச்சாளர் ஆவதற்கான நிறைய அடிப்படை விஷயங்களை கொண்டு இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.