இந்திய கிரிக்கெட்

நம் பரம எதிரியை வீழ்த்தனும்.. முழு தேசமும் உங்கள் பின்னால் இருக்கும்.. பாக் அணி வீரர்களுக்கு கட்டளையிட்ட பிரதமர்

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில தினங்கள் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணி உட்பட அனைத்து அணிகளும் மிகத் தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் தற்போதைய பிரதமர் சாம்பியன் டிராபி குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணியை பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கும் பாகிஸ்தான் அணி கோப்பையை இந்த முறையும் கைப்பற்றுவதற்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. முகமது ரிஸ்வான் தலைமையிலான அணி அனுபவம் மற்றும் இளமை என அனைத்தும் சரியான விகிதத்தில் இருக்கிறது.

மேலும் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே இருநாட்டு ரசிகர்களுக்கும் மிகப்பெரிய விருந்து என்பதை தாண்டி இந்த அணியிடம் தோற்க கூடாது என்ற வைராக்கியம் இரண்டு அணிகளுக்குமே இருக்கும். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் தற்போதைய பிரதமர் ஆன செபாஸ் ஷெரிஃப் கோப்பையை கைப்பற்றுவது மட்டுமல்லாமல் இந்திய அணியை வீழ்த்துவது பாகிஸ்தான் அணியின் முக்கியப் பணியாகும் என்று சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நமது பரம எதிரியை வீழ்த்துவது முக்கிய பணி

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “எங்களிடம் தற்போது மிகச்சிறந்த அணி இருக்கிறது. சமீப காலமாக பாகிஸ்தான் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு சிறந்த வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால் இப்போது உண்மையான பணி என்னவென்றால், சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்வது மட்டுமல்லாமல் துபாயில் நடக்க உள்ள போட்டியில் நமது பரம எதிரியான இந்திய அணியை தோற்கடிக்க வேண்டும். ஒட்டுமொத்த தேசமும் உங்களுக்கு பின்னால் இருக்கிறது.

இதையும் படிங்க:264 ரன்.. தமிழக அணிக்கு கருண் நாயர் தந்த தலைவலி.. விஜய் சங்கர் ஆறுதல்.. ரஞ்சி டிராபி காலிறுதி

கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெரிய ஐசிசி நிகழ்வை பாகிஸ்தான் அணி நடத்துவது ஒரு பெரிய சந்தர்ப்பமாகும். வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எங்கள் அணி தொடர்ந்து நாட்டை பெருமைப்படுத்தும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. அணி வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்” என்று பாகிஸ்தான் பிரதமர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். எனவே வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி இரண்டு நாட்டு ரசிகர்களுக்கு இடையே மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்பது மறுக்கப்படாத உண்மையாகும்.

- Advertisement -
Published by

Recent Posts