“பாகிஸ்தான் பிளேயர்ஸ் விளையாடுறது சம்பளத்துக்குதான்” – முன்னாள் பயிற்சியாளர் குற்றச்சாட்டு

0
53
Arthur

கடந்த வருடத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களுக்கு பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் பாதிப்படைந்து இருக்கிறது.

அதற்கு முன்பு வரை அதிக போட்டிகளில் உள்நாட்டில் விளையாடி பாகிஸ்தான் அணி வெற்றிகரமான அணியாக வெளியில் காட்சியளித்தது. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்திற்கும் வந்தது. மேலும் அப்போதைய கேப்டன் பாபர் அசாம் பேட்டில் இருந்து சதங்கள் வந்து கொண்டே இருந்தது.

- Advertisement -

இப்படியான நிலையில்தான் ஆசியக் கோப்பை மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை விளையாட வெளியில் வந்த பாகிஸ்தான் அணியின் பலவீனங்கள் தெரிய தொடங்கியது. அதற்குப் பிறகு பாகிஸ்தான அணி கொஞ்சம் கொஞ்சமாக விமர்சனங்களால் சரியா தொடங்கியது.

மேலும் பாகிஸ்தான் அணியின் கேப்டனுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருக்கும் இடையில் நல்ல உறவும் காணப்படவில்லை. உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் தோற்றது இன்னும் நிலைமைகளை மோசமாகிவிட்டது.

அப்பொழுது பாகிஸ்தான் அணியின் இயக்குனராக அதற்கு முன்னால் பயிற்சியாளராகவும் இருந்த மிக்கி ஆர்தர் தற்போதைய பாகிஸ்தான் வீரர்களின் மனநிலை எப்படி ஆனதாக இருக்கிறது? அதற்கு என்ன காரணம்? என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “அணியைச் சுற்றி சூழ்நிலை நன்றாக இருக்கும் பொழுது பாகிஸ்தான் அணி மிகவும் சிறப்பானது. ஆனால் அணிக்குள் பாதுகாப்பு இன்மை நிலவும் பொழுது, வீரர்கள் அடுத்த தொடர் மற்றும் அடுத்த சுற்றுப் பயணத்தில் தங்களுக்காக விளையாடி இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள மட்டுமே பார்க்கிறார்கள். அவர்களுக்கு சம்பள காண்ட்ராக்ட் மட்டுமே முக்கியமாக இருக்கிறது.

பாகிஸ்தானில் பெரிய அளவில் திறமைகள் இருக்கின்றன. மேலும் சில உலக தரம் வாய்ந்த வீரர்களும் இருக்கிறார்கள். வீரர்களுக்கு திறமை இருந்தால் மட்டும் போதாது. அவர்களை உருவாக்குவதற்கு ஆதரவும் தேவை. ஆனால் ஆதரவை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு தரவில்லை.

இதையும் படிங்க : 2வது டெஸ்டில் முகமது சிராஜ் ஏன் விளையாடவில்லை?.. உண்மை காரணத்தை வெளியிட்ட பிசிசிஐ

நான் இன்னும் பாகிஸ்தான் கிரிக்கெட்டை பாலோ செய்கிறேன். எப்பொழுதும் இதை செய்வேன். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மேல் இருந்த தீவிரமும், ஆர்வமும், தாகமும் இப்படியான காரணங்களால் பிறகு குறைய ஆரம்பித்துவிட்டது.பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் ஏமாற்றமளிக்கும் இடத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.