“இந்தியானாலே பாகிஸ்தான் வீரர்கள் பயப்படறாங்க.. ஒற்றுமையே இல்லை!” – மொயின் கான் நேரடியான விமர்சனம்!

0
1189
Pakistan

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்காக 7 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு வந்திருக்கிறது.

இறுதியாக பாகிஸ்தான் அணி 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக வந்திருந்தது. மேலும் இரு அணிகளுக்கும் இடையே 10 ஆண்டுகள் தாண்டி தனிப்பட்ட கிரிக்கெட் தொடர்களும் நடைபெறுவதில்லை.

- Advertisement -

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு யுனைடெட் அரபு எமிரேடில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக ஒரு உலகக் கோப்பை தொடரில், பாபர் அசாம் தலைமையில் இந்திய அணியை தோற்கடித்திருந்தது.

சுதாரித்துக் கொண்ட இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. மேலும் தற்போது ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு 228 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை கொடுத்தது.

பலம்மிக்க அணியாக தெரிந்த பாகிஸ்தான் அணி ஒரே தோல்வியில் சிதறிவிட்டது. அந்த அணியைச் சுற்றி ஏகத்துக்கும் குழப்பங்களும் விமர்சனங்களும் பரவி கிடக்கின்றன. கேப்டன் பாபர் அசாம் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

- Advertisement -

இந்த நிலையில் 345 ரன்கள் குவித்து உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணி இடம் பாகிஸ்தான் தோற்றது. இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மொயின் கான் தன்னுடைய விமர்சனத்தை கொஞ்சம் கடுமையாகவே முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“வீரர்கள் போட்டியின் போது சிதறி இருந்ததை நான் 100% பார்த்தேன். ரிஸ்வான், சதாப் யாராக இருந்தாலும், ஷாகினாக இருந்தாலும் கூட பாபருக்கு ஆலோசனைகள் சொல்வதில் அவர்கள் தயங்கினார்கள். அணி ஒருங்கிணைந்து இல்லை.

அவர்களுக்குள் எந்த ஆலோசனைகளும் களத்தில் நடைபெறவில்லை. கொடுக்கப்படும் ஆலோசனைகள் வேலை செய்யா விட்டால் என்ன செய்வது? என்று யாரும் எதுவும் சொல்லவும் இல்லை.

இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்தியாவுக்கு எதிராக எனும் பொழுது பாகிஸ்தான் வீரர்கள் பயப்படுகிறார்கள். மேலும் அவர்களின் ஆலோசனைகள் பலனளிக்காமல் போய்விடும் என்றும் பயப்படுகிறார்கள்.

ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் உங்களுடைய திறனை நூறு சதவீதம் பயன்படுத்தி விளையாட வேண்டும்.உங்கள் பரிந்துரைகள் தவறாகவும் போகலாம். அது நடக்கக்கூடிய ஒன்று. ஆனால் நீங்கள் வெற்றி பெற விரும்புகிறீர்களா இல்லையா என்பதை உங்கள் உடல் மொழி காட்டி விடும். வெற்றி பெறும் உடல் மொழியை பார்க்க முடியவில்லை.

ஓய்வு அறையில் சில சிக்கல்கள் இருந்தன என்பது எனக்குத் தெரியும். தொழில்முறை சூழலில் அங்கு சில வேறுபாடுகள் இருந்தன. ஆனால் நீங்கள் சிறப்பாக செயல்பட அவற்றை முடிக்க வேண்டும். நீங்கள் முன்னேற வேண்டும்!” என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்!