இங்கிலாந்து அணிக்கு எதிராக எஞ்சி இருக்கும் மீதி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து பகார் ஜமான் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
பாபர் அசாம் கடந்த இரண்டு வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் ஃபார்ம் இழந்து மிகவும் தடுமாறி வருகிறார். இந்த நிலையில் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸ்களிலும் மோசமாக விளையாடினார். மேலும் அணியும் தோல்வி அடைந்ததால் விமர்சனம் உருவாக பாபர் அசாம் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.
ஐந்து முக்கிய வீரர்கள் நீக்கம்
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக மீதம் இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம், சர்ப்ராஸ் அகமத், ஷாகின் ஷா அப்ரிடி, நசிம் ஷா மற்றும் அப்ரார் அகமது ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த ஐந்து பேருடைய இடத்திற்கு ஹசிபுல்லா, மெக்ரான் மும்தாஸ், கம்ரான் குலாம், முகமத் அலி, சஜித் கான், நோமன் அலி மற்றும் ஷாகித் மெக்மோத் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இறுதியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகவும் கடினமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நட்சத்திர வீரர்களை வெளியே அனுப்பிவிட்டது.
விராட் கோலியை இந்தியா கைவிட்டதா?
பாபர் அசாம் நீக்கம் குறித்து பேசி இருக்கும் பகார் ஜமான் கூறும் பொழுது “பாபர் அசாம் அணியில் இருந்து நீக்கப்பட்டது மிகவும் கவலைக்குரிய ஒரு செய்தி. 2020 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் விராட் கோலியின் ரன் சராசரி மூன்று வடிவத்திலும் 20ல்தான் இருந்தது. இப்படி இருந்த பொழுதும் கூட இந்தியா அவரை வெளியே உட்கார வைக்கவில்லை. தொடர்ந்து விராட் கோலியை இந்திய அணியில் விளையாட வைத்தார்கள்”
இதையும் படிங்க : நான் இங்கிலாந்துல வச்சே பார்த்தேன்.. ஷான் மசூத் நல்ல கேப்டனே கிடையாது.. இதான் காரணம் – டேவிட் லாயிட் பேச்சு
“இங்கு நாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் உருவாக்கிய மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ஒருவரை வெளியே அனுப்புவதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறோம். இப்படி செய்வது அணிக்கு எதிர்மறையான செய்தியை அனுப்புவது போல் அமைந்து விடும். நாம் தேவையில்லாமல் பீதி பட்டனை அமுக்குகிறோம். இதை தவிர்க்க இப்பொழுது கூட நம்மால் முடியும். முக்கிய வீரர்களை குறைத்து மதிப்பிடுவதைவிட நாம் அவர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






