நான் இங்கிலாந்துல வச்சே பார்த்தேன்.. ஷான் மசூத் நல்ல கேப்டனே கிடையாது.. இதான் காரணம் – டேவிட் லாயிட் பேச்சு

0
101
Masood

தற்போது பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் ஷான் மசூத் அந்த பொறுப்புக்கு தகுதியான நபர் கிடையாது என இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிட் விமர்சனம் செய்திருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 556 ரன்கள் குவித்த பொழுதிலும் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது பெரிய விமர்சனங்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

ஷான் மசூத் தலைமையில் ஆறு தொடர் தோல்விகள்

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்து பாபர் அசாம் ஒட்டுமொத்தமாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதும், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷான் மசூத் கொண்டுவரப்பட்டார். அவர் பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டனாக ஆஸ்திரேலியாவிற்கு முதலில் சென்றார். அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தார்.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக முதல்முறையாக பாகிஸ்தான் மண்ணில் பங்களாதேஷனுக்கு எதிரான தொடரை சந்தித்தார். இரண்டு போட்டிகள் கொண்ட இந்து தொடரையும் முழுமையாக இழந்தார். இதைத் தொடர்ந்து சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியையும் தோற்றுகிறார். அவர் கேப்டனாக பதவியேற்ற முதல் ஆறு போட்டிகளையும் தோற்றுகிறார்.

- Advertisement -

ஷான் மசூத் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர் இல்லை

ஷான் மசூத் கேப்டன் திறமை குறித்து பேசி இருக்கும் இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிட் கூறும் பொழுது “சில நேரங்களில் நல்ல மனிதர்களாக இருப்பவர்கள் நல்ல கேப்டனாக இருக்க முடியாமல் போகிறது. கேப்டன் பொறுப்பில் நீங்கள் கொஞ்சம் ஆட்டிட்யூட் கொண்டவராக இருக்க வேண்டும். ஷான் மசூத் யார்க்ஷையர் அணியின் கேப்டனாக இருந்த பொழுது, அவருக்கு கேப்டன் பொறுப்புக்கான தகுதி இல்லை என்று எனக்கு தெரிந்தது”

இதையும் படிங்க :

“அவர் வேகமாக செயல்படுவதில் சற்று பின்தங்கியவராக இருக்கிறார். மேலும் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன்களான இம்ரான் கான், ஜாவேத் மியான்தத், வாசிம் அக்ரம், இன்சமாம் உல் ஹக் மற்றும் மிஸ்பா உல் ஹக் போன்றவர் கிடையாது என்பது என்னுடைய சொந்த கருத்து” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -