“பாகிஸ்தான் அடுத்து எந்த மேட்ச்சும் ஜெயிக்க கூடாது.. எல்லாத்தையும் தோக்கனும்!” – கம்ரன் அக்மல் கொடுத்த அதிரடி ஸ்டேட்மென்ட்!

0
7408
Akmal

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அடுத்தடுத்து மூன்று படு தோல்விகளை சந்திக்க, தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புயல் அடிக்க ஆரம்பித்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய கிரிக்கெட் நாடுகள் யாரும் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் வந்து கிரிக்கெட் விளையாடாமல் இருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

- Advertisement -

இதற்குப் பின்பு பாபர் அசாம் உலக அளவில் சிறந்த பேட்ஸ்மேனாக பாகிஸ்தான் அணியில் இருந்து வெளியே வர, உள்நாட்டில் இருந்து மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு பெரிய ஆதரவுகள் பெருகியது.

மேலும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரண்டு கிரிக்கெட் நாடுகளும் தங்களுடைய பார்வையை மாற்றி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து விளையாடின. இதற்கு அடுத்து பாகிஸ்தானுக்கு ஏற்பட்டு இருந்த கிரிக்கெட் சார்ந்த பிரச்சினைகள் குறைந்தது. ஒரு புத்துணர்ச்சி பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஏற்பட்டது.

அவர்கள் தொடர்ச்சியாக பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடினார்கள். சொந்த நாட்டில் விளையாடி நிறைய வெற்றிகளை கொண்டு வந்ததின் மூலமாக அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்திற்கும் வந்தார்கள்.

- Advertisement -

இதற்குப் பிறகு அவர்கள் ஆசிய கோப்பைக்கு வர எல்லாம் மாறியது. பெரிய அணிகளுக்கு எதிராக வெளி மண்ணில் விளையாடும் பொழுது அவர்களுடைய பலவீனங்கள் மிக மோசமாக வெளிப்பட்டது. பாகிஸ்தான் அணிக்குள் இருந்த பிரச்சனைகள் இந்த தோல்விகளின் மூலமாக வெளியில் வந்து பயங்கர விமர்சனத்திற்கு உள்ளாக இருக்கிறது.

உலகக் கோப்பை தொடர்பில் கேப்டனை மாற்றும் சம்பவம் நடப்பது மிகவும் மோசமான ஒன்றாகக் கருதப்படும். எனவே இந்த காரணத்திற்காக மட்டுமே தற்பொழுது பாபர் அசாம் கேப்டன்சி தப்பி இருக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கூறும் பொழுது ” இந்த உலகக் கோப்பையில் மீதி இருக்கும் எல்லா ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைய வேண்டும். அப்பொழுதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றங்கள் செய்யப்படும். இவர்கள் மீண்டும் பார்முக்கு வந்து வெற்றிகள் பெற்றால், இவர்கள் ஏற்கனவே என்ன செய்தார்களோ அதைத்தான் திரும்ப செய்வார்கள்!” என்று கடுமையாக கூறியிருக்கிறார்!