அடப்பாவமே..! 48 மணி நேரம் மட்டுமே நீடித்த பட்டம்.. பாகிஸ்தானுக்கு ஐசிசி வைத்த ஆப்பு

0
3771

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான அணி படைத்த பெரிய சாதனை 48 மணி நேரம் கூட நீடிக்காமல் போனது அந்த நாட்டு ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. உலகமே ஐபிஎல் தொடர் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தின் இரண்டாம் தர வீரர்களுடன் ஐந்து ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது.

இதில் பாகிஸ்தான அணி நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனை அடுத்து ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. இதனை அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடினர்.

- Advertisement -

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உலகின் நம்பர் ஒன் அணியை நாங்கள் அறிமுகம் செய்து வைக்கிறோம் என்றெல்லாம் டிவிட் போட்டு இருந்தார்கள். பாகிஸ்தான் ரசிகர்கள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார்கள். மேலும் சிலர் இந்திய கிரிக்கெட் அணியை வசைப்பாடினார்கள்.

ஆனால் இந்த மகிழ்ச்சி எல்லாம் 48 மணி நேரம் கூட தாக்கு பிடிக்கவில்லை என்பதுதான் மிகவும் சோகமான விஷயம்.நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 299 ரன்கள் குவித்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 252 ரன்கள் ஆட்டம் இழந்தது. கடந்த ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம் பாபர் அசாமை பிராட்மேனுடன் எல்லாம் ரமீஷ் ராஜா ஒப்பிட்டு பேசினார். ஆனால் நேற்று ஆட்டத்தில் பாபர் அசாம் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி சர்வதேச ஒருநாள் போட்டிக்காண தரவரிசை பட்டியலில் தங்களுடைய இடத்தை இழந்தது.

- Advertisement -

தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தை பிடித்திருக்கிறது.இந்தியா 2வது இடம் பிடிக்க, பாகிஸ்தான அணி 3வது இடத்திற்கு சரிந்துள்ளது. இதனை அறிந்து இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் இரண்டு நாள் கூட பாகிஸ்தானினால் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறி வருகின்றனர். மேலும் சிலர் ஜாலியா இருந்துச்சா சரி இறங்கு என்ற சூரிய வம்சம் டெம்ப்ளட்டை போட்டு கிண்டல் அடித்திருக்கிறார்கள்.