ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27ஆம் தேதி தொடங்கும் நிலையில் இந்திய அணி இன்று துபாய் புறப்பட்டு சென்றது. ஒவ்வொரு அணி வீரர்களும் ஆசிய கோப்பை தொடர்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடையே நேர்காணல் ஒன்றை நடத்தியுள்ளது. அதில் ரவி சாஸ்திரி, வாசிம் அக்கரம் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
அப்போது வாசிம் அக்கிரமிடம் இந்திய அணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் அளித்த பதிலில், தமக்கு ரோகித் சர்மா ,கேஎல் ராகுல்,விராட் கோலி போன்ற வீரர்களை மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டார். ஆனால் எனக்கு இன்னொரு ஒரு இளம் வீரரை தற்போது மிகவும் பிடித்து விட்டது. அதுவும் டி20 கிரிக்கெட்டில் அந்த வீரர் சிறப்பாக விளையாடுகிறார். அவர் வேறு யாரும் அல்ல சூர்யா குமார் யாதவ் தான்.
கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் அவர் முதன் முதலாக சேர்ந்த போது தான் நான் அவரை பார்த்தேன். இரண்டு ஆட்டங்களில் கீழ் வரிசையில் சூரிய குமாரியாதவ், கே கே ஆர் அணிக்காக விளையாடினார். அதில் அவர் அடித்த சாட் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அந்த ஷாட் ஆடுவது மிகவும் கடினமானது.
ஆனால் அவர் அப்போதே அதனை சிறப்பாக செய்தார். தற்போது அவர் இந்திய அணியில் இருக்கிறார் அவர் விளையாடுவதை பார்ப்பது நமது கண்களுக்கு நிச்சயம் விருந்து தான். சுழற்பந்து வீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சு என அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் அவர் ஒரு அபாயகரமான வீரர். 360 டிகிரி கோணத்தில் அவரால் ஷாட் ஆடி ரன் குவிக்க முடியும். பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமல்ல மற்ற அனைத்து அணி வீரர்களுக்கும் சூரியகுமார் யாதவ் ஒரு அபாயகரமான வீரராக திகழ்வார் என்பது சந்தேகமே இல்லை என்று வசிம் அக்ரம் கூறினார் .
இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் தொடக்க வீரராக களமிறங்குவாரா அல்லது நடுவரிசையில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணம் கேஎல் ராகுல் இன்னும் பார்மில் இல்லை. அவரை தொடக்க வீரராக களம் இறக்கினால் தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோருக்கு அணியில் இடம் இருக்காது.இல்லையெனில் வேகப்பந்துவீச்சாளர் ஒருவரை அணியிலிருந்து நீக்க வேண்டியதாக இருக்கும். இதற்கு கே எல் ராகுலை நீக்கிவிட்டு நடுவரிசையில் களம் இறங்கும் ஒரு வீரரை தொடக்க வீரராக வாய்ப்பு கொடுத்தால் அணியின் சமம் தன்மை இருக்கும். இதனால் ரோகித் சர்மா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.