“பாகிஸ்தான் பெரிய டீம் கிடையாது.. நாம யாரை ஜெயிச்சோம்.. புரிஞ்சுக்கோங்க!” – மிஸ்பா உல் ஹக் கடுமையான விமர்சனம்!

0
2187
Misbah

நேற்று இந்தியாவில் தொடங்கிய 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில், இன்று பாகிஸ்தான அணி நெதர்லாந்து அணியை ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சந்திக்கிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடருக்கு புறப்படுவதற்கு முன்பிருந்தே பாகிஸ்தான் அணி நிர்வாகம் ஐசிசி மற்றும் பிசிசிஐ உடன் மிகப்பெரிய கருத்து வேறுபாடுகளை கொண்டு இருந்தது.

- Advertisement -

தங்களுக்கு கொடுக்கப்பட்ட போட்டி அட்டவணைகளில் சென்னை பெங்களூர் குஜராத் போட்டிகளை மாற்ற வேண்டும் எனக் கேட்டுபிடிவாதம் பிடித்தது. இறுதியாக ஐசிசி மற்றும் பிசிசிஐ சம்மதிக்காததால் இறங்கி வந்தது.

இதற்கு அடுத்து ஆசியக் கோப்பை தொடர் நடத்தப்படுவதில் பெரிய சிக்கல்கள் எழுந்தது. இது ஒரு புறம் சென்று கொண்டிருக்க, பாகிஸ்தான் அணி இலங்கையில் வைத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக வென்று, ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது.

ஆனால் இது ஒரு சிறிய நல்ல கனவு என்பது போல சில நாட்களில் முடிவுக்கு வந்துவிட்டது. பாகிஸ்தான் வெளியே வந்து வலிமையான அணிகளுடன் விளையாடும் பொழுது அவர்களுக்கு தங்களுடைய பலம் என்னவென்று புரிந்தது. இந்தியா ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது. பலம் குன்றிய இலங்கை அணியும் எளிதாக வீழ்த்தியது. இதற்கு அடுத்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் பாகிஸ்தான் வெளியேறியது.

- Advertisement -

தற்பொழுது பாகிஸ்தான் அணி தங்களுடைய உண்மையான பலத்தை தெரிந்து கற்பனையில் இருந்து வெளிவந்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஆசியக் கோப்பைத் தொடர் அவர்களுடைய பலவீனத்தை வெளிச்சம் போட்டு அவர்களுக்கு காட்டி இருக்கிறது. தற்பொழுது பயிற்சி போட்டிகளிலும் அவர்களது பலவீனத்தை முன்வைத்தே அவர்கள் பயிற்சி பெற்றார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் இது பற்றி கூறும் பொழுது “நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தான் வந்தன. அவர்கள் தரவரிசையில் நல்ல நிலையில் இருக்கும் பெரிய அணிகள். ஆனால் அவர்கள் அனுப்பிய அணிகள் சி மற்றும் டி அணிகள்.

இந்த அணிகளை நாங்கள் வென்றதால் எங்களுடைய தரவரிசை புள்ளிகள் அதிகரித்தது. பிறகு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பிற அணிகள் இங்கு வர நாங்கள் அவர்களையும் வென்றோம். நாங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இடத்தை பிடித்ததைக் குறித்து நான் மகிழ்ந்தேன். ஆனால் நாம் உண்மை என்னவென்று மனதில் கொள்ள வேண்டும்.

இதில் ஆஸ்திரேலியாவின் சி அணி கூட எங்களிடம் ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. அதன் பிறகு நியூசிலாந்து டி அணி வந்தது. அவர்களின் முதன்மையான அணி ஐபிஎல் விளையாட சென்றது.

எங்களுடைய முதல் தர அணி விளையாடுவது அவர்களுடைய மூன்றாம் தர அணியுடன் என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் நம்முடன் மிக நெருக்கமாக போட்டியில் இருந்தார்கள். தரவரிசை என்பது இங்கு ஒரு பொருட்டு கிடையாது என்று கூறியிருக்கிறார்!