“கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை பார்த்து பயப்படுகிறது!” – பாக் அப்துல் ரசாக் வெளிப்படையான பேச்சு!

0
924
Razzak

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பெரிய அணிகள் சிலவற்றுக்கு ஆபத்தாக இருக்கும் என்று தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே கணிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுமே தங்களுடைய முதல் போட்டியில் எதிர்த்து விளையாட வேண்டிய நிலைமை உருவானது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர்கள் சொதப்பிய காரணத்தினால், பங்களாதேஷ் அணியிடம் ஆப்கானிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து பங்களாதேஷ் அணி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணியிடம் மோசமாக தோற்றது. ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. ஆபத்தை கொடுக்கக் கூடிய அணிகள் என்று கணிக்கப்பட்டு எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது ஏமாற்றமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் ஆப்கானிஸ்தான் அணி இதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து நடப்பு உலக சாம்பியனை வீழ்த்தி, நடப்பு உலகக் கோப்பை தொடருக்கான அரை இறுதி வாய்ப்புக்கு பல கதவுகளை திறந்து விட்டு, தொடரை சுவாரசியப்படுத்தி இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் உள்நாட்டு நிலவரங்கள் சரியில்லாத பொழுதும் கூட, அவர்கள் கிரிக்கெட்டில் காட்டும் ஆர்வமும் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் பெற்றுள்ள வளர்ச்சியும் மிகவும் ஆச்சரியப் படத்தக்க கூடிய வகையில் இருக்கிறது. அந்த அணிக்கு எதிராக எந்த சர்வதேச நாடுகளும் மிக எளிதாக களம் காண முடியாது. நிச்சயம் ஆப்கானிஸ்தான் அணிக்கான மரியாதையை கொடுக்க வேண்டிய நிலைமை இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து பாகிஸ்தான அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் கூறும் பொழுது “கிரிக்கெட்டில் சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை பார்த்து பாகிஸ்தான் பயப்படுகிறது. நசீம் ஷாவால் இரண்டு முறை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியிடம் இருந்து பாகிஸ்தான் தப்பி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருந்தாலும் கூட, இது அவர்கள் நல்ல அணி என்பதை காட்டுகிறது.

ஆப்கானிஸ்தான் அணியின் நம்பிக்கை இந்தியாவிற்கு எதிராக விளையாடிய பொழுது பேட்டிங்கிலும் தற்பொழுது இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய பொழுது பந்து வீச்சிலும் மிகவும் அதிகரித்திருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்!