“பாகிஸ்தான் பைனலுக்கு தகுதியான டீம் கிடையாது.. அவங்க தென் ஆப்பிரிக்கா மாதிரி!” – ஸ்ரீசாந்த் விமர்சனம்!

0
426
Srisanth

இன்று இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் 16வது ஆசியக்கோப்பையின் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் விளையாட இருக்கின்றன.

இதுவரை நடைபெற்றுள்ள 16 ஆசியக் கோப்பை தொடர்களில் இந்தியா ஏழு முறையும், இலங்கை ஆறுமுறையும் வென்று மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

- Advertisement -

இந்த முறையும் இந்தியா இலங்கையின் ஆதிக்கம் ஆசியக் கோப்பையில் தொடர்கிறது. அதேபோல் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இதுவரை மோதிக் கொண்டதில்லை என்கின்ற 39 வருட வரலாறும் தொடர்கிறது.

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால் ஒட்டுமொத்தமாக அவர்களது செயல்பாடு மிகவும் பின்தங்கி இருக்கிறது. அவர்கள் இதுவரை இரண்டு முறை மட்டுமே ஆசியக் கோப்பையை வென்று இருக்கிறார்கள். எவ்வளவு பெரிய பலமான அணியாக இருந்த பொழுதும் அவர்களுக்கு ஆசியக் கோப்பையில் தொடர்ந்து சரிவுதான் உண்டாகி இருக்கிறது.

கடந்த ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானே வலிமையான அணியாக கருதப்பட்டது. ஆனால் அவர்கள் இரண்டாவது சுற்றில் இலங்கை அணியிடம் தோற்றும் இறுதிப் போட்டியில் மீண்டும் இலங்கை அணியிடம் தோற்றும் கோப்பையை இழந்தார்கள்.

- Advertisement -

இந்த முறை ஆசிய கோப்பையிலும் பாகிஸ்தான் அணிதான் வலிமையாக இருக்கிறது என்று பலரும் கூறினார்கள். ஆனால் இந்த முறை இரண்டாவது சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறாமலே பாகிஸ்தான் வெளியேறியது.

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வேத பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறும் பொழுது
“பாகிஸ்தானை அணி இறுதிப் போட்டிக்கு வருவதற்கான தகுதியோடு இல்லை. அவர்கள் தென் ஆப்பிரிக்க அணியை போன்றவர்கள். அவர்களுக்கு இறுதி போட்டி என்றாலே மூச்சுத் திணறும். இந்த முறை இறுதிப்போட்டி மிகவும் சிறப்பானதாக இருக்கும். கேப்டன் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக கோப்பையை வெல்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

வாஷிங்டன் சுந்தர் தனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். மேலும் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் டிஎன்பிஎல் என்று அவரது செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனாலும் இன்றைக்கு நேரடியாக இறுதிப் போட்டி இந்திய அணியில் இடம் பெறுவாரா? என்றால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. குல்தீப் யாதவ் அணிக்கு திரும்புவார்!” என்று கூறியிருக்கிறார்.