இந்தியாவில் டெய்லி இத சாப்பிடுறோம்.. அதான் ஸ்லோவா இருக்கோம்.. பாகிஸ்தான் வீரர் சதாப் கான் நகைச்சுவையான பேச்சு.!

0
6535

இந்தியாவில் நடைபெற இருக்கின்ற 13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியும் மீண்டும் இந்தியாவிற்கும் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டிகளுக்காக துபாய் வழியாக ஹைதராபாத் வந்தடைந்தது பாகிஸ்தான்.

அந்த அணியின் இரண்டு பயிற்சிய ஆட்டங்களும் ஹைதராபாத்தில் நடைபெற்றன. இதில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியது. மேலும் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் பில்டிங் மிகவும் சுமாராக இருந்தது. எளிதாக பிடிக்கக் கூடிய பந்துகளை கூட நான்கு ரன்களுக்கு கோட்டை விட்டனர்.

- Advertisement -

இதே சமூக வலைதளங்களில் கேளிக்கை உள்ளானது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி வருகின்ற ஆறாம் தேதி தங்களது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியுடன் ஹைதராபாத்தில் விளையாட இருக்கிறது. ஹைதராபாத் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பிரியாணி தான். ஹைதராபாத் நகருக்கு வரும் ஒவ்வொரு நபரும் அங்கு இருக்கும் பிரியாணியை சுவைத்து விட வேண்டும் என்று விரும்புவார்கள். இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின் நடைபெற்ற பேட்டியின் போது ஹைதராபாத் பிரியாணி பற்றி நகைச்சுவையுடன் குறிப்பிட்டார் சதாப் கான்.

நேற்றைய போட்டிக்கு பின்னர் ஹைதராபாத்தில் பிரபலமான பிரியாணி குறித்து சதாப் கானிடம் கேட்கப்பட்டது. அதற்கு நகைச்சுவையுடன் பதில் அளித்த அவர் நாங்கள் தினமும் ஹைதராபாத் பிரியாணியை தான் சாப்பிட்டு வருகிறோம். அதனால்தான் எங்களது பீல்டிங் மிகவும் ஸ்லோவாக இருப்பதாக தெரிவித்தார். ஆஸ்திரேலியா அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இது குறித்து பேசிய சதாப் கான்” போட்டியின் முடிவுகள் என்பது முக்கியமல்ல. இந்தப் போட்டிகளில் இருந்து எங்களுக்கு நிறைய பாசிட்டிவான விஷயங்கள் கிடைத்திருக்கின்றன. நாங்கள் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று விளையாடினோம் ஆனால் முடிவுகள் நம் கையில் இல்லை” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்தப் போட்டிகளில் இருந்து உலகக் கோப்பையில் ஆடுவதற்கான 11 வீரர்களை நாங்கள் தேர்வு செய்து விட்டோம் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய ஆண்களுடன் விளையாடும் போது உங்களது நம்பிக்கை அதிகரிக்கும். நாங்கள் உலக கோப்பையில் முக்கிய போட்டிகளை சந்திக்க நம்பிக்கையுடன் இருக்கிறோம். மேலும் இந்த பயிற்சி போட்டிகளின் மூலம் ஆடுகளத்தின் தன்மை மற்றும் சூழ்நிலைகளை புரிந்து எங்களால் விளையாட முடிந்தது” என தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணி உலக கோப்பையின் முதல் போட்டியில் நெதர்லாந்து அணியுடன் அக்டோபர் ஆறாம் தேதி விளையாட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது. மேலும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 14ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.