டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றுள்ளதை தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி மீது இந்திய அணியின் பார்வை விழுந்திருக்கிறது. இருப்பினும் சாம்பியன் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதால், இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுக்கப்படுவதை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய அணியை கடைசியாக 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு ஆசிய கோப்பை விளையாட சென்றது. அதற்கு பின்னர் சில சூழ்நிலைகளால் இந்தியா பாகிஸ்தான் செல்வது தவிர்த்து வருவதை தொடர்ந்து இருநாட்டு அணிகளுக்கு இடையேயான தொடர்களும் நடைபெறாமல் உள்ளன. ஆனால் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணி இந்தியா வந்து பங்கேற்றது.
கடைசியாக 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை இந்தியாவில் நடைபெற்றவை தொடர்ந்து பாகிஸ்தான் அணி இந்தியாவில் கலந்து கொண்டு விளையாடியது. இந்த சூழ்நிலையில் 2025ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன் டிராபி தொடரை நடத்த உள்ளது. இதனால் இந்தியா பாகிஸ்தானில் கலந்து கொண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க மறுப்பு தெரிவிக்கும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து உலகக் கோப்பையில் பங்கேற்ற நிலையில் இந்திய அணியும் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது “2025 சாம்பியன் டிராபியை நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு உள்ளது. அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்த வேண்டும். மற்ற அனைத்து அணிகளும் பாகிஸ்தான் வந்து விளையாடுவதைப் போல இந்தியாவும் விளையாட வேண்டும். பாகிஸ்தான் உலகக்கோப்பைக்காக இந்தியா வந்து விளையாடியதை போல் இந்திய அணியும் இதை செய்ய வேண்டும். இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து நிறைய விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவின் கபடி மற்றும் டென்னிஸ் அணிகள் இதே பாகிஸ்தான் வந்து விளையாடுகின்றன. அது மட்டும் எப்படி நடக்கிறது.
கபடி டென்னிஸ் விளையாட பாகிஸ்தான் வர முடியும் என்றால் கிரிக்கெட் விளையாடவும் இந்திய அணி பாகிஸ்தான் வரவேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரே போல இருக்க வேண்டும். இல்லையென்றால் கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் வர முடியாதது போலவே, இந்திய அணி கபடி மற்றும் டென்னிஸ் விளையாடவும் பாகிஸ்தானுக்கு வரக்கூடாது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கக் கூடாது.
இங்கு குறிப்பாக பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய வீரர்கள் வந்து விளையாடுவதை பார்க்க விரும்புகிறார்கள். பாகிஸ்தானில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு என பல ரசிகர்கள் இருக்கின்றனர். இங்கு நடைபெறும் உள்ளூர் தொடரான பிஎஸ்எல் லீக்கில் அவர்கள் விளையாடவில்லை என்று தெரிந்தும், ரசிகர்கள் அவர்களது போஸ்டர்களை கொண்டு மைதானத்திற்கு வருகிறார்கள். மக்கள் அவர்கள் விளையாடுவதை பார்க்க விரும்புகிறார்கள். இந்தியாவில் கூட சில பாகிஸ்தான் ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : சாம்சன் விரக்தி அடைய வைப்பார்.. ஆனா அவர் என்கிட்ட சொன்ன விஷயம் காப்பாத்திடுச்சு – அபினவ் முகுந்த் பேச்சு
2023 ஆசிய கோப்பையை பாகிஸ்தான் நடத்தினாலும் இந்தியா பயணம் செய்ய மறுத்ததைத் தொடர்ந்து போட்டி ஹைபிரிட் முறையில் நடத்தப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அப்போது இலங்கையில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.