சாம்சன் விரக்தி அடைய வைப்பார்.. ஆனா அவர் என்கிட்ட சொன்ன விஷயம் காப்பாத்திடுச்சு – அபினவ் முகுந்த் பேச்சு

0
357
Sanju

நேற்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி ஐந்தாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் நான்குக்கு ஒன்று என கைப்பற்றியது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் அவரது பேட்டிங் மாற்றம் குறித்து தமிழக வீரர் அபினவ் முகுந்த் பேசியிருக்கிறார்.

சஞ்சு சாம்சன் முதல் இரண்டு டி20 போட்டிகளை தவறவிட்டார். இதற்கு அடுத்து இரண்டு போட்டிகளில் அவர் பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு பெரிதாக அமையவில்லை. நேற்று கடைசி போட்டிகள் தான் அவர் பேட்டிங் செய்வதற்கு நல்ல வாய்ப்பு நிறைய ஓவர்களுடன் கிடைத்தது.

- Advertisement -

இந்திய அணி 40 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்த பொழுது, சஞ்சு சாம்சன் ரியான் பராக்கை வைத்து 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இத்தோடு சிறப்பாக விளையாடி ஒரு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். பேட்டிக் செய்ய கொஞ்சம் கடினமான ஆடுகளத்தில் பொறுப்பாக விளையாடி அணியை காப்பாற்றினார்.

சஞ்சு சாம்சன் குறித்து பேசி இருக்கும் தமிழக வீரர் அபிநவ் முகுந்த் ” இந்திய கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனாக இருப்பது மிகவும் கடினம், ஏனென்றால் அவர் அதிக திறமைகளுடன் இருப்பதோடு, சில நேரங்களில் உங்களை விரக்தி அடையவும் வைத்துவிடுவார்.அவர் முன்பு முதிர்ச்சியை காட்டி விளையாடாமல் இருந்து வந்தார்.

- Advertisement -

ஆனால் என்னிடம் சொன்னது போல, ஐபிஎல் தொடரில் கேப்டன் ஆகி சூப்பர் ஸ்டார் வீரர்களுடன் விளையாடுவது உடன், ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் போன்ற இளம் வீரர்கள் உடனும் அவர் நன்றாக பழகுகிறார். இது அவருடைய ஆட்டத்திற்கு உதவி இருக்கிறது.

இதையும் படிங்க : இங்கிலாந்து தொடர்.. எதிர்கால ஆஸி அணி அறிவிப்பு.. புதிய கேப்டன்.. வார்னர் கோரிக்கை புறக்கணிப்பு.. அதிரடி வீரர் சேர்ப்பு

இங்குதான் அவர் முதிர்ச்சி அடைந்ததை பார்க்க முடிகிறது. இந்திய கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் இடத்தை பிடிப்பதற்கு பெரிய போட்டி நடந்து கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி தனது கையை உயர்த்தி ‘இங்கே பாருங்கள் நானும் இங்குதான் இருக்கிறேன். விக்கெட் கீப்பருக்கான இடத்தை தேர்வு செய்வதற்கான விவாதத்தில் என் பெயரை உங்களால் ஒதுக்க முடியாது’ என்று கூறியிருக்கிறார்” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -