பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான நஷீம்சா காயம் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. முன்னணி வேகப் பந்து வீச்சாளரை இழந்த பாகிஸ்தான் அணி அந்த தொடரில் கோப்பையை வெல்லாமல் வெளியேறியது.
இந்த சூழ்நிலையில் நஷீம் ஷா டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட தாக்கம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான இளம் வேகப்பந்துவீச்சாளரான நஷீம்சா தனது புயல் வேகப்பந்து வீச்சின் மூலமாக எதிர் அணிகளைத் திணறடித்து வருகிறார். குறிப்பாக இவரது பவுன்சர் பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் கடும் சவாலாக இருக்கும். சமீபத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிய பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது.
அதிலும் குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி நிர்ணயத்தை 119 ரன்கள் இலக்கை கூட பாகிஸ்தான் அணியால் வெற்றி பெற முடியவில்லை. மேலும் கத்துக்குட்டி அணியான அமெரிக்க அணி இடமும் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இடையே பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் உலக கோப்பை தாக்கம் குறித்து நஷீம்ஷா ஹோட்டலில் உணவு அருந்த சென்றால் கூட மக்கள் இதைப் பற்றி தன்னிடம் கேட்பதாக கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் ஹோட்டலுக்கு சென்றால் கூட மக்கள் என்னிடம் வந்து ஏன் உலக கோப்பையில் தோற்றோம் என்று கேட்கிறார்கள். இது பற்றி என்னுடைய உறவினர்கள் கூட கேட்டிருக்கின்றனர். அவர்களது உணர்வுகள் சமூக வலைதளங்களோடு ஒன்றி இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு வீரராக நான் செய்வது அவர்கள் சொல்வதை கேட்பதுதான். ரசிகர்கள் அல்லது சமூக வலைதளங்களால் நான் குறி வைக்கப்படவில்லை என்றாலும் உங்களது அணி தோல்வி அடைந்த பிறகு தன்னால் முடிந்தவரை செய்தேன் என்று ஒருவர் திருப்தி அடைய முடியாது.
ஏனென்றால் நான் வெற்றியடைய விரும்பக் கூடிய ஒரு நபர். வீட்டிலோ அல்லது தெருவிலோ கூட நான் விளையாடும் போது தோல்வியடைந்தால் ஏமாற்றம் அடைகிறேன். நான் வெற்றி பெறவே எப்போதும் உரையாடுகிறேன். உலக கோப்பையில் இருந்து வெளியேறியது என்னை மிகவும் வேதனைப்படுத்திய விஷயமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:சாம்பியன் வீரர் இடத்தில் ஜாகிர் கான்.. ஐபிஎல் தொடரில் புதிய பதவி.. மும்பை இந்தியன்ஸ்க்கு டாடா
அடுத்ததாக பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக நஷீம்ஷா மிக தீவிரமாக தயாராகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.