விசம் வைத்து கொல்ல பார்த்தார்கள்.. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பகீர் குற்றச்சாட்டு

0
42

தமக்கு உணவில் தொடர்ந்து விஷம் கலக்கப்பட்டு கொலை செய்ய பார்த்தார்கள் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் இம்ரான் நசீர் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் சர்ச்சைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் அவ்வளவு இடம் இருக்கிறது.பாகிஸ்தான் கிரிக்கெட்டைப் பற்றி பல மர்மமான விஷயங்கள் அவ்வப்போது வெளிவரும்.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தானுக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடிய பெருமை பெற்றவர் இம்ரான் நசீர். 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற்ற போது இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு அச்சத்தை கொடுத்தவர்தான் இந்த இம்ரான் நசீர். இனி கிரிக்கெட் போட்டிகளில்  தாம் சரியாக விளையாடக் கூடாது என்பதற்காகவும், தன் உயிரை பறிப்பதற்காகவும் சிலர் தனது உணவில் மெர்குரி வகையான விஷத்தை கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விஷமானது நம் உடலில் நமக்கே தெரியாமல் நாளடைவில் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும் வல்லமை பெற்றிருப்பதாகவும், இதனால் கடந்த ஏழு ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும் இம்ரான் நசீர் கூறியுள்ளார். தாம் உடல்நிலை சரியில்லாத குறித்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது தான், தமக்கு விஷம் வைக்கப்பட்ட சம்பவம் தெரிய வந்ததாக இம்ரான் நசீர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக சிகிச்சை மேற்கொள்ள தான் சேமித்து வைத்திருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட்டதாகவும் இம்ரான் நசீர் வேதனை தெரிவித்துள்ளார். பணம் இல்லாமல் மருத்துவ சிகிச்சை பெற முடியாத இருந்த தம்மை அப்ரிடி தான் பணம் கொடுத்து காப்பாற்றி இருப்பதாகவும் இம்ரான் நசீர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அப்ரிடி தம்மை ஒரு சகோதரர் போல் அரவணைத்து கடைசி நேரத்தில் உதவியதாகவும் அவர் கூறினார். தாம் யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காத நிலையில் தம்மை கொல்லும் அளவுக்கு சிலர் இருப்பதாகவும் அவர்கள் யார் என்று தனது தெரியாது என்றும் இம்ரான் நசீர் கூறியுள்ளார் .இம்ரானின் இந்த பேட்டி தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.