“பாகிஸ்தான் கிரிக்கெட் இந்தியாவை பார்த்து கத்துக்கனும்.. முக்கியமான ஒரு விஷயம் அங்க இருக்கு!” – சோயப் மாலிக் அறிவுரை!

0
4477
Malik

நடப்பு உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பில் இருந்து பாகிஸ்தான் அணி ஏறக்குறைய வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டி அரையிறுதி வாய்ப்புக்கான எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கின்ற நிலையில்தான் இருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால், அவர்களின் பலமான வேகப்பந்துவீச்சுத் துறையே தற்பொழுது பலவீனமாக மாறி இருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் பாகிஸ்தான் அணி சுழற் பந்து வீச்சில் யாரையும் விட மோசமாக இருக்கிறது. மேலும் அந்த அணியில் பகார் ஜமானை விட வேகமாக அதே சமயத்தில் வெற்றிகரமாக விளையாடக்கூடிய வீரர்கள் இல்லை.

பாகிஸ்தான் பீல்டிங் எப்பொழுது இருந்து கீழ் நிலையில்தான் இருந்து வருகிறது. அவர்கள் முக்கியமான போட்டிகளில் முக்கியமான நேரத்தில் பந்தை தவற விடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். உடல் தகுதி பிரச்சனை தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இப்படி பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை இரண்டு தொடர்களும் மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை உருவாக்கிய தொடர்களாக இருக்கிறது. உலகக் கோப்பை முடிந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பாபர் அசாம் வரை கேப்டன் பொறுப்பில் இருந்து மாற்றப்பட அதிக வாய்ப்பு உண்டு.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டை சுட்டிக்காட்டி பேசிய சோயப் மாலிக் கூறுகையில் ” இந்த உலகக்கோப்பையில் இந்தியா அனைத்து அம்சங்களிலும் மிகச் சிறப்பாக இருக்கிறது. நான் பவுலிங், பேட்டிங், பீல்டிங் என மூன்று துறைகள் பற்றி மட்டும் சொல்லவில்லை.

இந்திய அணியிலும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தங்களுக்கு பி திட்டத்தை சரியாக வைத்திருந்தார்கள். முன்னேறி செல்வது வீரர்களை ஒரு குழுவாக வைத்திருப்பது முக்கியமாகும்.

ஒவ்வொரு வடிவ கிரிக்கெட்டுக்கும் தனி வீரர்கள் மற்றும் அவர்கள் சம நிலையில் வாய்ப்புகள் பெறுவது முக்கியம். இதன் காரணமாகத்தான் அவர்கள் வாய்ப்புகள் வரும்போது தயாராக இருக்கிறார்கள்.

நாம் மீண்டும் அணியைக் கட்டி எழுப்பும் செயல்பாட்டுக்கு செல்கிறோம். ஆனால் நாங்கள் எந்த முடிவுகளை எடுக்கிறோமோ அதில் தொடர்ந்து நாங்கள் செயல்படுவது கிடையாது. இந்த விஷயங்களில் இந்தியாவைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!