சோசியல் மீடியாவை பார்த்து பயந்துதான்.. பாபர் ரிஸ்வானுக்கு பாக் வாரியம் அந்த வேலையை செய்யல – பசித் அலி கருத்து

0
59

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலிருந்து தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது.

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பசித் அலி சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களாக கருதப்படும் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அணியின் வெற்றிக்காக விளையாடாமல் தங்களது இடத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவே அவர்களது செயல்பாடு இருந்தது என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம் செய்திருந்தனர். இதன் எதிரொலியால் பாகிஸ்தான் அணி அரை இறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் சுற்றிலேயே வெளியேறியது.

தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ள நிலையில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானை டி20 தொடரில் இருந்து நீக்கிவிட்டு ஒரு நாள் அணியில் சேர்த்து இருக்கிறார்கள். இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பசித் அலி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமூக வலைதளங்களில் ரசிகர்களை கண்டு பயப்படுவதாக சில கருத்துக்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரையும் டி20 அணியில் இருந்து நீக்கிவிட்டு ஒரு நாள் அணியில் சேர்த்து இருக்கிறார்கள். உங்களுக்கு தைரியம் இருந்திருந்தால் இரண்டு தொடர்களுக்கும் அவர்களுக்கு ஓய்வை அளித்திருப்பீர்கள். ஆனால் அவர்கள் சமூக ஊடகங்களுக்கு பயப்படுவதால் அவ்வாறு இவர்கள் செய்யவில்லை.

இதையும் படிங்க:எங்க பாக் வீரர் ஐபிஎல் ஆடுனா.. ஆர்சிபி அணி கண்டிப்பாக கோப்பையை வெல்லும் – பாகிஸ்தான் முன்னாள் வீரர்

ஹாரிஸ் ரவூஃப் மற்றும் ஷாஹீன் அப்ரிடி எப்படி வந்தார்கள்? அவர்களை ஒருநாள் அணியில் இருந்து நீக்கி விட்டு டி20 தொடருக்கு எப்படி உள்ளே கொண்டு வந்தார்கள். இவர்கள் இருவரும் மோசமான பந்துவீச்சாளர்கள் என்று நான் சொல்லவில்லை ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான செயல் திறன் காரணமாக முகமது ரிஸ்வானை அணியில் இருந்து நீக்கிய போது இந்த இருவரும் அணியில் இருக்க தகுதியற்றவர்களாகவே மாறுகிறார்கள்” என்று பசித் அலி பேசி இருக்கிறார்.

- Advertisement -