எங்க பாக் வீரர் ஐபிஎல் ஆடுனா.. ஆர்சிபி அணி கண்டிப்பாக கோப்பையை வெல்லும் – பாகிஸ்தான் முன்னாள் வீரர்

0
135

18 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அகமது ஷேஷாத் ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற சில யோசனைகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

18 வது ஐபிஎல் சீசன் திருவிழா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெரிய ரசிகர்களைக் கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட கைப்பற்ற முடியாமல் தடுமாறி வருகிறது. பெங்களூர் அணி அதிக அளவு ரசிகர் பட்டாளங்களை வைத்திருக்க முக்கிய காரணமாக இந்திய அணியின் விராட் கோலி இருக்கிறார். கிட்டத்தட்ட தனது ஆரம்ப வாழ்க்கை முதல் ஒரே அணிக்காக விராட் கோலி விளையாடி வரும் நிலையில் அவரது செயல் திறன் மற்றும் விசுவாசத்திற்காக அதிக அளவு ரசிகர்கள் இன்று வரை கூடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆர்சிபி அணியில் கெயில் முதல் டிவில்லியர்ஸ் வரை நட்சத்திர வீரர்கள் இருந்தாலும், பந்து வீச்சுக்கு தகுந்த வீரர்களை அந்த அணி எடுக்க மறுப்பதால் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அகமது ஷேஷாத் மற்றும் முகமது அமீர் பேசிக் கொண்டிருந்த போது முகமது அமீர் ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். சிறந்த பந்துவீச்சு இல்லாத காரணத்தால் தான் ஆர்சிபி கோப்பையை இன்னும் வெல்லவில்லை எனவும் கிண்டலாக சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஆர்சிபி அணியில் விளையாட வேண்டும்

இதுகுறித்து முகமது அமீர் முதலில் கூறும் போது “விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக நான் விளையாட விரும்புகிறேன். ஏனென்றால் இன்னும் ஆர்சிபி அணி தனது முதல் ஐபிஎல் பட்டத்தை தேடிக் கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். எனவே முகமது அமீரின் இந்த கருத்துக்கு மற்றொரு பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமது ஷேஷாத் முகமது அமீர் ஏன் பெங்களூர் அணியில் விளையாட வேண்டும் என்பதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:362 ரன்.. வில்லியம்சன் ரவீந்திரா அசத்தல்.. மில்லர் போராட்டம் வீண்.. தெ.ஆ தோல்வி.. நியூசி பைனலுக்கு தகுதி.. CT 2025

இது குறித்து அவர் கூறும் போது “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு முகமது அமீர் போன்ற ஒரு பந்துவீச்சாளர் தேவை. ஏனென்றால் பெங்களூர் அணி எப்போதும் வேகப்பந்து வீச்சின் ஆழத்தில் சிக்கிக் கொள்கிறது. ஆனால் அந்த அணியின் பேட்டிங் எப்போதுமே உயர்தரமாக இருக்கும். எனவே முஹமது அமீர் ஆர்சிபி அணிக்காக விளையாடினால் பெங்களூர் அணி பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ளது” என்று கூறி இருக்கிறார். பெங்களூர் அணி இந்த முறை பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து புவனேஸ்வர் குமார் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை தங்கள் அணியில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -