இந்திய கிரிக்கெட்

மனசு ரொம்ப புண்பட்டு இருக்கு.. இங்கிலாந்து செஞ்ச அதை செய்ய எங்ககிட்ட வழி இல்ல – ஷான் மசூத் வேதனை

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் எடுத்தோம் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது ஒரு தேசமாகவே அனைவரையும் வேதனைப்படுத்தி இருப்பதாக பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் கூறியிருக்கிறார்.

- Advertisement -

147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்த ஒரு அணி 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து இதுவரையில் தோல்வி அடைந்தது கிடையாது. ஆனால் முல்தானில் இந்த வரலாற்றை மாற்றி மோசமான வரலாற்றை பாகிஸ்தான் எழுதியது. ஏற்கனவே வீழ்ந்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டை இது மிகவும் வேதனைப்படுத்தி இருக்கிறது.

ஒரு தேசமாக புண்பட்டுள்ளோம்

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் கூறும்பொழுது “இந்த முடிவால் நாங்கள் காயம் பட்டு இருக்கிறோம் ஒரு தேசமாக நாங்கள் ஒட்டுமொத்தமாக புண்பட்டு இருக்கிறோம். நான் ஒருபோதும் பொறுப்பில் இருந்து தப்பித்து ஓட முயற்சி செய்யவில்லை. இதில் வேதனை என்னவென்றால் நாங்கள் பெறவேண்டிய முடிவைப் பெறவில்லை. நாங்கள் அதற்கான முயற்சியில் இருக்கிறோம்”

“நீங்கள் 550 ரன்கள் முதல் இன்னிங்ஸில் எடுத்திருந்தால் 10 விக்கெட்டுகள் எடுத்து நீங்கள் போராட வேண்டும். நீங்கள் உங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 220 ரன்கள் எடுக்கிறீர்கள் என்றால் அது எப்படியான முன்னிலை என்பதைப் பொறுத்து மாறுகிறது. எங்களுடைய 20 விக்கெட்டுகளையும் எடுக்க இங்கிலாந்து ஒரு வழியை கண்டுபிடித்தது. நாங்களும் அந்த வழியை கண்டுபிடிக்க வேண்டும்”

- Advertisement -

நாங்கள் பேசியது இதுதான்

மேலும் பேசிய ஷான் மசூத் கூறும்பொழுது “நாங்கள் தொடரின் நடுவில் இருக்கிறோம்எனவே அணியின் மனநிலை மற்றும் சீரான தன்மை குறித்து பேசி இருக்கிறோம். ஆடுகளம் எப்படி இருந்தாலும் கூட இங்கிலாந்து ஒரு வழியை கண்டுபிடித்தது போல நாங்களும் விக்கெட் எடுக்க வழியை கண்டுபிடிக்க வேண்டும். சிலநேரங்களில் சாதகமான சூழ்நிலை கிடைக்காது”

இதையும் படிங்க : இங்கிலாந்து வெற்றி.. மாறிய WTC புள்ளி பட்டியல்.. பாகிஸ்தான் அணி பரிதாபம்.. இந்தியா உச்சம்

“நாங்கள் மூன்றாவது மற்றும் நான்காவது இன்னிங்ஸை எப்படி அணுகுவது? என்பது குறித்து பேசி இருந்தோம். இருந்த போதிலும் நாள் வடிவில் இது ஒரு அணியாக சேர்த்து விளையாட வேண்டிய விளையாட்டு. ஒரு தனியாக நாம் செயல்படுவதை பொறுத்து நன்மைகளும் வேறு விதமான விளைவுகளும் உண்டு+ என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by