இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
அடுத்த ஆண்டு மத்தியில் இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. தற்பொழுது இதற்கான போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை என மூன்று அணிகள் இருக்கின்றன.மேலும் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தினால் அந்த அணிக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.
இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் தாக்கத்தை ஏற்படுத்தாத வெற்றி
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பிலிருந்து ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான அணிகள் வெளியேறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் பெரும் வெற்றி தோல்வி என்பது மற்ற எந்த அணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வென்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால் புள்ளி பட்டியலில் கடைசி ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா ஆதிக்கம்
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா முதல் இடத்திலும் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் இருந்து வருகின்றன. மேலும் மூன்றாவது இடத்தில் இலங்கை அணியும் நான்காவது இடத்தில் இங்கிலாந்து அணியும் இருக்கிறது. ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இருக்கின்றன.
இதையும் படிங்க : 3 நூற்றாண்டுகள்.. பாகிஸ்தான் உலக சாதனை தோல்வி.. இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :
இந்தியா – 74.24%
ஆஸ்திரேலியா – 62.50%
இலங்கை – 55.56%
இங்கிலாந்து – 45.59%
தென் ஆப்பிரிக்கா – 38.89%
நியூசிலாந்து – 37.50
பங்களாதேஷ் – 34.38%
வெஸ்ட் இண்டீஸ் – 18.52%
பாகிஸ்தான் – 16.67%






