நாங்க இப்பவே இந்த இந்திய வீரருக்கு எதிரா பிளான் பண்ணுவோம்… நியூயார்க் நிலைமையை பார்ப்போம் – பாபர் அசாம் பேட்டி

0
34
Babar

ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சிறந்த வீரராக மட்டும் இல்லாமல் மிகச்சிறந்த கேப்டனாகவும் டேவிட் வார்னர் இருந்திருக்கிறார். தற்போது வரையில் அந்த அணிக்கு இவரது இடத்தை நிரப்பக்கூடிய வகையில் யாரும் இல்லை. இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நடந்து கொண்ட முறை மனக்காயத்தை ஏற்படுத்தியதாக கூறியிருக்கிறார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2016 ஆம் ஆண்டு டேவிட் வார்னர் தலைமையில் ஐபிஎல் தொடரை கைப்பற்றியது. அந்த வருடம் கேப்டனாக மட்டுமில்லாமல் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் மிகச் சிறந்த முறையில் அவர் விளையாடியிருந்தார். மேலும் இந்த காலகட்டத்தில் மட்டும் அவர் அதிக ரன்கள் குவித்தவர்களுக்காக மூன்று முறை ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றி இருந்தார்.

- Advertisement -

இப்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகத்துடன் மிக சுமூகமாக டேவிட் வார்னருக்கு சென்று கொண்டிருந்த உறவு 2021 ஆம் ஆண்டு திடீரென மோசம் அடைய ஆரம்பித்தது. அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக அமைந்திருந்தது.

திடீரென கேப்டனான டேவிட் வார்னர் விளையாடும் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அடுத்த சில போட்டிகளில் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். மைதானத்தில் ரசிகர்கள் அமரும் பகுதியில் இருந்து போட்டிகளை வந்து பார்த்தார். மேலும் 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் ஹைதராபாத் அவரை கழட்டியும் விட்டது. அதற்குப் பிறகு அவர் டெல்லி அடிக்க விளையாடுகிறார்.

- Advertisement -

தற்பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களின் யூட்யூப் சேனலில் டேவிட் வார்னர் பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். இதில் தற்போது சக ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் ஹைதராபாத் அணிக்கு சிறப்பாக விளையாடியதை பாராட்டுவதற்காக, ஹைதராபாத் அணியின் சமூக வலைதள பக்கத்தை டேக் செய்யும் பொழுது, அவரை அந்த அணி நிர்வாகம் பிளாக் செய்திருப்பதை அவர் கண்டுபிடித்தார். இது அவருக்கு மிகுந்த மனவேதனையை கொடுத்திருக்கிறது.

இதையும் படிங்க : ஹைதராபாத் டீம் இப்படி செய்யும்னு எதிர்பார்க்கல.. ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டேன் – டேவிட் வார்னர் பேச்சு

இதுகுறித்து டேவிட் வார்னர் கூறும் பொழுது “நான் எப்பொழுதும் சமூகவலை தளத்தில் ஆக்டிவாக இருப்பதற்கு காரணம் ரசிகர்கள் தான். என்னுடைய கருத்துப்படி ஒரு வீரருக்கு ரசிகர்கள்தான் மிக முக்கியமான உணர்வு. மேலும் ஹைதராபாத் அணி மற்றும் ரசிகர்களுடன் கொண்டிருந்த ஈடுபாடு அற்புதமானது. எனவே அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு எனக்கு கடமை இருப்பதாக உணர்ந்தேன். மேலும் நான் அவர்களது சமூக வலைதள பக்கத்தில் ஏன் பிளாக் செய்யப்பட்டேன் என்று புரியவில்லை. எனக்கு இது பெரிய மனக்காயத்தை உண்டு செய்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -