நாளை ஆசியக்கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டிக்கு முன்பாக மீண்டும் பாகிஸ்தான் அணி நிர்வாகம் தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது.
இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்பு அந்த வீரர்களுடன் கை கொடுக்காத சம்பவம் தொடர்ந்து சர்ச்சையாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக வழக்கமான நிகழ்வுகள் அனைத்துமே ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்திய அணி கைகுலுக்காததை தொடர்ந்து பாகிஸ்தான் அணி கேப்டன் போஸ்ட் மேட்ச் பிரசண்டேஷன் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து யுஏஇ அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தவில்லை.
மேலும் யுஏஇ அணிக்கு எதிரான போட்டிக்கு ஒரு மணி நேரம் தாமதமாகவே ஹோட்டலில் இருந்து புறப்பட்டு பாகிஸ்தான் அணி மைதானத்திற்கு வந்தது. இப்படி பாகிஸ்தான் அணி நிர்வாகம் தங்களால் முடிந்த அளவுக்கு இந்தியா மற்றும் ஐசிசிக்கு எதிர்ப்பை காட்டி வருகிறது.
இந்த நிலையில் நாளை இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக சம்பிரதாய பத்திரிகையாளர் சந்திப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் ரத்து செய்திருக்கிறது. அதே நேரத்தில் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனின் இந்த விஷயத்தை பார்த்தால்.. ரொம்ப ஆச்சரியமா இருக்கு.. ஒரு சிலருக்கு மட்டுமே இது இருக்கும் – சுனில் கவாஸ்கர்
மேலும் பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்துவிட்டு பாகிஸ்தானின் மோட்டிவேஷனல் ஸ்பீச்சர் ரஹீல் கரீமை அழைத்து வந்து வீரர்களை ஊக்கப்படுத்த முடிவு செய்து இருக்கிறது. பாகிஸ்தான் அணி நிர்வாகம் இப்படி செய்யும் வினோத முயற்சிகளை சமூக வலைதளத்தில் பல நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் வேலை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.