சஞ்சு சாம்சனின் இந்த விஷயத்தை பார்த்தால்.. ரொம்ப ஆச்சரியமா இருக்கு.. ஒரு சிலருக்கு மட்டுமே இது இருக்கும் – சுனில் கவாஸ்கர்

0
38

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது தொடரில் வலுவான நிலையில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சஞ்சு சாம்சன் குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொடர் துவங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் டி20 தொடரில் எப்போதுமே துவக்க வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் சுப்மான் கில்லின் வருகையால் துவக்க இடத்திலிருந்து மாற்றப்பட்டு இருக்கிறார். மிடில் வரிசையில் விளையாடுவதற்கு அவரை தயார்படுத்தும் இந்திய அணி கடந்த போட்டியில் மூன்றாவது இடத்தில் களம் இறங்கினார்.

மூன்றாவது வரிசையில் இறங்கிய சாம்சன் 45 பந்துகளை எதிர்கொண்டு நிதானமாக விளையாடி 3 போர் மற்றும் 3 சிக்ஸ் என 56 ரன்கள் குவித்தார். இந்த சூழ்நிலையில் இது குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர், அவர் பேட்டிங் செய்த விதம் குறித்தும், தனக்குப் பிடித்தமான விஷயம் குறித்தும் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “சாம்சன் சிறப்பாக பேட்டிங் செய்தார், அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டிய தேவை இருந்தது. அதாவது அடுத்த போட்டியில் அவர் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்ய வரக்கூடும். ஒரு பேட்டர் 40 முதல் 50 ரன்கள் வரை எடுக்கும் போது மைதானத்தில் பௌண்டரிகள் மற்றும் சிக்சர்கள் நிலைத்து நின்று அடிக்கும் போது அவருக்கு நம்பிக்கை வருகிறது.

இதையும் படிங்க:மீண்டும் மீண்டுமா? கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல.. பாகிஸ்தானுக்கு செக் வைத்த ஐசிசி

அவரது நேரம் சிறப்பானதாக உள்ளது. அவர் ஒரு சிக்சரை காத்திருந்து நேராக அடித்தார். அவர் அந்த சிக்சரை அடித்த விதம் கடைசி நொடியில் அவர் ஷாட்டை மாற்றியபோது நன்றாக இருந்தது. அவரது தரம் என்னவென்று இதிலிருந்து பார்க்க முடியும். பந்தை பொறுத்திருந்து விளையாட அவருக்கு அதிக நேரம் கிடைக்கிறது. எங்கு அடிக்க வேண்டும் என்பதில் அவருக்கு பல தேர்வுகள் உள்ளன. காத்திருந்து ஆப் சைடில் அடிக்க வேண்டுமா அல்லது லெக் திசையில் அடிக்க வேண்டுமா? என்று தேர்வு செய்து விளையாடுகிறார். சாம்சங் அப்படிப்பட்ட ஒரு பேட்ஸ்மேன் தான்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -