தற்போது சர்வதேச முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கு பெற்று விளையாடும் உலக லெஜெண்ட் டி20 லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வென்று பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையில் சர்ஜில் கான் 0, மக்சூத் 1, சோயப் மாலிக் 0 என வரிசையாக வெளியேற பாகிஸ்தான் அணி நெருக்கடியில் சிக்கியது.
இந்த நிலையில் ஜோடி சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் கம்ரன் அக்மல் மற்றும் கேப்டன் யூனுஸ் கான் இருவரும் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணியை மீட்டு எடுத்தார்கள். கம்ரன் அக்மல் 31 பந்துகளில் 46 ரன்கள், கேப்டன் யூனுஸ் கான் 45 பந்தில் 65 ரன்கள் எடுத்தார்கள்.
மேலும் கடைசி கட்டத்தில் வந்த ஆமீர் யாமின் 18 பந்தில் 40* ரன், சோகைல் தன்வீர் 17 பந்தில் 33 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தரப்பில் எட்வர்ட்ஸ் மூன்று விக்கெட், பென் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் டிவேன் ஸ்மித் 24 பந்தில் 26, கிரீஸ் கெயில் 21 பந்தில் 22, வால்டன் 10 பந்தில் 19, ஆஸ்லே நர்ஸ் 24 பந்தில் 36, எம்ரிட் 9 பந்தில் 29 ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் பந்து வீச்சு தரப்பில் சோகைல் கான் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : ஹேய் ஜிம்மி.. 22 வருட ஸ்பெல் முடிஞ்சிடுச்சு – உருக்கமாக ஆண்டர்சனுக்கு சச்சின் வாழ்த்து
இறுதியாக பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக லெஜன்ட் சாம்பியன்ஷிப் டி20 லீக்கில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று நடைபெறும் இன்னொரு அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ள இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.






