சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி & விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

0
138
Babar Azam surpasses Virat Kohli and Viv Richards

கடைசியாகச் சென்ற நூற்றாண்டின் இறுதி வருடங்களில் பாகிஸ்தானிற்கு சென்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாடியதை அடுத்து, 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வருடம் ஏப்ரல் கடைசியில்தான் மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள், ஒரு ட்வென்ட்டி ட்வென்ட் போட்டியில் விளையாட பாகிஸ்தானிற்கு சென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி!

முதலில் நடந்த டெஸ்ட் போட்டி தொடரில் முதலிரண்டு போட்டிகள் டிராவில் முடிய, மூன்றாவது போட்டியை வென்று டெஸ்ட் தொடரையும் வென்றது ஆஸ்திரேலியா அணி. இந்த நிலையில் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடருக்கான முதல் ஆட்டம் லாகூர் கடாபி மைதானத்தில் நேற்று நடந்தது.

- Advertisement -

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் பீல்டிங்கை தேர்வு செய்ய, வார்னர் இல்லாத ஆஸ்திரேலியா அணிக்குத் துவக்கம் தர வந்த டிராவிஸ் ஹெட் அதிரடியாய் ஆடி 72 பந்துகளில் 101 குவித்தார். இதனால் பாகிஸ்தானிற்கு 314 என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி.

பாகிஸ்தான் அணிக்குத் துவக்கம் தர களமிறங்கிய இமாம் உல் ஹக் சிறப்பாக விளையாடி சதமடித்த போதும் 103 [96, கேப்டன் பாபர் ஆஸம் அரைசதமடித்த போதும் 57 [72], பின் வந்த வீரர்களில் யாரும் நின்று விளையாடததால், பாகிஸ்தான் அணி 225 ரன்களில் சுருண்டு 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவிய போதும் கேப்டன் பாபர் ஆஸம் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான சாதனை ஒன்றைப் படைத்தார். அதாவது ஒருநாள் போட்டியில் 4000 ரன்களை வேகமாக அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியைத் தாண்டி இரண்டாம் இடம் பிடித்தார்.

- Advertisement -
ஒருநாள் போட்டியில் வேகமாக 4000 ரன்களை குவித்து முதல் ஐந்து இடங்களைப் பிடித்த வீரர்கள்:

ஹசீம் அம்லா – 81
பாபர் ஆஸம் – 82
விவியன் ரிச்சர்ட்ஸ் – 88
ஜோ ரூட் – 91
விராட் கோலி – 93
டேவிட் வார்னர் – 93