“எங்கள கட்டம் கட்டி முடிச்சது குல்தீப் இல்ல ரோகித்தான்.. என்னா மாதிரி கேப்டன்ஷிப்” – ஓவைஸ் ஷா பேட்டி

0
1082
Rohit

மார்ச்-7. ஹிமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெறும், இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆன ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வலிமையான இடத்தில் இருக்கிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை குல்தீப் யாதவ் மொத்தமாக சரித்தார். அவருடைய பந்துவீச்சில் 5 இங்கிலாந்து முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்து பெவிலியன் சென்றார்கள்.

- Advertisement -

திடீரென அவர் பந்துவீச்சில் அதிவேக தாக்குதலை நடத்த, ஆடுகளத்தில் பந்து என்ன செய்கிறது என்று சுத்தமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் களுக்கு புரியவில்லை. அவரிடம் வரிசையாக 5 முன்னணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை கொடுக்க, அடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்து அணியை 218 ரன்னில் சுருட்ட உதவி செய்தார்.

இன்றைய போட்டியில் குல்தீப் யாதவ் பந்து வீசிய விதத்தை பார்க்கையில், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய சுழற் பந்துவீச்சு தாக்குதலை முன்னணியில் நின்று இந்தியா மட்டுமல்லாது வெளிநாட்டிலும் வழிநடத்தக்கூடிய சுழற் பந்துவீச்சாளராக தெரிகிறார்.

குல்தீப் யாதவ் மொத்தம் 15 ஓவர்கள் பந்து வீசி, 1 மெய்டன் செய்து, 72 ரன்கள் விட்டு தந்து, 5 விக்கெட் கைப்பற்றினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு இது நான்காவது 5 விக்கெட்டுகள் ஆகும். மேலும் 2017 ஆம் ஆண்டு இதே தரம்சாலா மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமாகி முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஓவைஸ் ஷா குல்தீப் யாதவின் பந்துவீச்சை பாராட்டும் அதேவேளையில், இன்று ஆன்பீல்ட் கேப்டன்ஷியில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ள ரோஹித் சர்மாவை பாராட்ட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இன்றைய நாளில் நாம் ரோகித் சர்மாவையும் பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியா மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாடும் பொழுது, இதுவரையில் ரோகித் சர்மா முதலில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அடுத்து ரவீந்திர ஜடேஜா ஆகியோரை பந்துவீச்சுக்கு கொண்டு வந்திருந்தார். பின்னர் அவர் குல்தீப் யாதவிடம் செல்கிறார்.

இதையும் படிங்க : அஸ்வின் பந்தை வாங்க மறுத்த காரணம் என்ன?.. மைதானத்தில் என்ன சொன்னார்? – குல்தீப் வெளியிட்ட விஷயம்

ஆனால் அவர் எடுத்ததும் குல்தீப் யாதவிடம் பந்தை கொடுத்து இந்த ஆடுகளத்தில் என்ன செய்ய முடியும் என்று காட்டச் சொன்னார். தன் கேப்டன் கேட்டபடியே அவர் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி காட்டி இருக்கிறார். எனவே நாம் ரோகித் சர்மா கேப்டன்ஷிப்பை பாராட்ட வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.