“எங்க வார்னர் எப்பவும் சதத்துக்காக விளையாட மாட்டார்.. அவங்க சூப்பர் ஸ்டார்கள்!” – ஸ்டாய்னிஸ் உள்குத்து பேச்சு?!

0
562
Warner

நேற்று ஆஸ்திரேலியா அணி தன்னுடைய நான்காவது போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, தன்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் தற்காலிகமாக தற்பொழுது நான்காவது இடத்திற்கும் முன்னேறி உள்ளது.

நேற்றைய போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் 163 ரன்கள் குவித்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்த போட்டியில் டேவிட் வார்னர் 10 ரன்கள் எடுத்திருந்தபொழுது ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் கொடுத்த எளிமையான கேட்சை உசாமா மிர் தவறவிட்டார். இதற்கு அடுத்து ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களையும் டேவிட் வார்னர் வதம் செய்தார்.

நேற்றைய போட்டியில் டேவிட் வார்னர் உலகின் அதிவேக பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சை குறி வைத்து தாக்கினார். அவர் பந்து வீச வந்தாலே முதல் பந்தில் இருந்தே அடித்து நொறுக்கினார். நேற்று மொத்தமாக அவர் 15 பந்துகளை வீசி முடித்து இருந்த பொழுது 54 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியின் செயல்பாடு மிகவும் சுமாராக இருந்து வந்த வேலையில், டேவிட் வார்னரின் அணுகுமுறை ஆஸ்திரேலியா அணிக்கு புதிய நம்பிக்கையை கொடுப்பதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் கூறும்பொழுது “டேவிட் வார்னர் ஆட்டத்தை எடுத்துக் கொண்ட விதத்தை நான் மிகவும் விரும்புகிறேன். அவர் நூறு ரன்கள் அடிப்பதற்காக விளையாடவில்லை. அவர் ஒட்டுமொத்த போட்டியையும் எடுத்துக் கொள்ள விளையாடுகிறார்.

மேலும் அவரால் எப்படி பேட்டிங் செய்ய முடியும் என்பதை எங்களிடம் காண்பிப்பதற்காக விளையாடுகிறார். இதுபோல அவரிடம் எத்தனையோ முறை பார்த்திருக்கிறோம். அவர் எல்லா ஸ்டாண்டுகளிலும் அடிக்கிறார். அவர் முதல் பந்திலேயே ஆட்டத்தை எடுக்கும் நம்பிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது.

வார்னர் மற்றும் மார்ஸ் இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்வதை விரும்புகிறார்கள். கடந்த இரண்டு மாதங்களாக டி20 கிரிக்கெட் மூலம் அவர்கள் நல்ல பிணைப்பை பெற்றிருக்கிறார்கள்.

இன்று மார்ஸ்க்கு பிறந்தநாள். அவருக்கு நிறைய வாழ்த்துக்கள் வந்திருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் இந்த பார்ட்னர்ஷிப் மிகவும் சிறப்பானது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக டேவிட் வார்னரின் நான்காவது சதம் என்று நினைக்கிறேன். அதனால் அவரது சாதனையும் சிறப்பானது. இருவருமே சூப்பர் ஸ்டார்கள்!” என்று கூறி இருக்கிறார்!

விராட் கோலி சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சதத்திற்காக விளையாடினார் என்கின்ற பேச்சு சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் வார்னர் சதத்திற்கு விளையாட மாட்டார் என்று கூறி பாராட்டி இருக்கிறார்.