“எங்க கேப்டன தப்பா எடை போட்டுட்டாங்க.. அவருக்கு இதுதான்..!” – டேவிட் வார்னர் அதிரடி!

0
7416
Warner

2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அந்நாட்டு அணியின் மூத்த வீரரும் தொடக்க ஆட்டக்காரருமான டேவிட் வார்னர் தனது அணி தலைவர் பேட் கம்மின்சை வெகுவாக பாராட்டியுள்ளார்.

உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா தனது முதல் இரு போட்டிகளில் தோல்வியுற்றாலும் அதற்குப் பிறகு வெகுண்டெழுந்து எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

அரைஇறுதியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தனது பலமான பந்துவீச்சு மற்றும் சிறப்பான பேட்டிங் திறனால் தென்னாபிரிக்க அணியையும் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இந்தியாவை எதிர்கொண்டது.

இறுதிப் போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி தனது அசத்தலான பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறனால் வெற்றி பெற்று 6 வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு அணித்தலைவர் பேட் கம்பெனிஸ் இன் கேப்டன்சி செயல்பாடுகளும் மிக முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனால் உலகக்கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி தனது இந்திய சுற்றுப்பயணத்தில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணியிடம் தொடரை இழந்து கடும் விமர்சனகளை எதிர்கொண்டும் நேர்மறைகளற்ற அணி சூழல்களிலும்தான் உலக கோப்பையை எதிர் கொண்டதும் குறிப்பிடத்தக்கது

- Advertisement -

இதனை ஆஸ்திரேலியா அணியின் மூத்த வீரரும் தொடக்க ஆட்டக்காரருமான டேவிட் வார்னர் பேட் கம்மிங் செய் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “2023 உலகக் கோப்பையின் தொடக்க இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா அணி தோல்வி பெற்ற போது கேப்டன் கம்மின்சும் விமர்சனங்களால் பாதிக்கப்பட்டார். ஒரு கேப்டனாக தைரியமாக முடிவெடுப்பது மிகவும் தனித்துவமானது.

அவர் இறுதி போட்டியில் பந்து வீசியவீதம் நம்ப முடியாதது. இதுதான் இந்த உலகக் கோப்பையின் அவரது சிறந்த ஸ்பெல்.கம்மின்ஸ் தனது 10 ஓவர்களில் 2/34 என தனது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தி இந்தியாவின் பேட்டிங் வேகத்தையும் கட்டுப்படுத்தினார்” என்று கூறியுள்ளார்!