கேப்டனா இருக்கிறதால மட்டும் ரோகித் டீம்ல இருக்கார்.. அதையும் பிடுங்கி இருக்கனும்.. விராட் கோலி – ஆஸி லெஜன்ட் பரபரப்பு பேச்சு!

0
1788
Rohit

இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இல்லாத போது கூட, அணிக்குள் வருகின்ற இளம் வீரர்கள், அவருடன் மிக அதிகமாக ஒட்டிக் கொள்வார்கள். அந்த அளவிற்கு அவர் இளம் வீரர்களை ஆதரிப்பவராக இருந்து வந்திருக்கிறார்!

காரணம், தான் இளம்வீரராக இருந்த பொழுது அணிக்குள் தனியாக இருந்தது போல வருகின்ற இளம் வீரர்கள் இருக்கக் கூடாது, அவர்களுக்கு சூழ்நிலைகள் எல்லாம் வெகு சீக்கிரத்தில் பழக வேண்டும், அப்பொழுதுதான் அவர்கள் அழுத்தம் இல்லாமல் இருக்க முடியும் என்று அவர் நினைத்தார்.

- Advertisement -

இப்பொழுதும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ரோஹித் சர்மா கேப்டன் ஆன பிறகும் கூட, இளம் வீரர்களுடன் களத்திற்கு வெளியே அதிக நேரம் செலவிட கூடியவராக இருக்கிறார். இளம் வீரர்களுக்கு தரும் வாய்ப்பை முடிந்த வரையில் நீட்டிக்க செய்கிறார்.

இந்த வகையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மீது இளம் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் என பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார். இந்திய கேப்டன்களில் வீரர்களோடு மிக இயல்பாக இருக்கும் கேப்டன் என்ற பெயர் அவருக்கு இருக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய லெஜெண்ட் கிரேக் பிளிவெட் ரோகித் சர்மா குறித்து தன்னுடைய மிகக் கடுமையான பார்வையை முன்வைத்திருக்கிறார். இது மிகவும் சர்ச்சையான முறையில் கூட அமைந்திருக்கிறது.

- Advertisement -

ரோகித் சர்மா குறித்து ஆஸ்திரேலியா லெஜன்ட் கூறும்பொழுது “நான் இந்தியாவின் கேப்டனை பற்றி கவலைப்படுகிறேன். நான் உண்மையைத்தான் சொல்கிறேன். ரோகித் சர்மா தற்பொழுது கேப்டன் பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் இந்தியா அவரை ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து நகர்த்தி இருக்கலாம்.

என்னால் இது மீண்டும் தவறாக போவதை பார்க்க முடிகிறது. இந்தியா எப்பொழுதும் உலக கோப்பைக்கு வரும். ஆனால் அவர்கள் அதை வெல்ல மாட்டார்கள். ரோகித் சர்மா ஒரு கேப்டனாக இந்தியாவுக்கு உலக கோப்பையை வெல்வார் என்று நான் நம்பவில்லை.

விராட் கோலியை மீண்டும் கேப்டன் ஆக்க முடியுமா? என்றால், அவருடைய காலம் முடிந்து விட்டது. அவர் மீண்டும் திரும்பி வருவார் என்று நான் நினைக்கவில்லை. ரோகித் சர்மா தற்பொழுது தொங்கிக் கொண்டிருக்கிறார். அவர் கேப்டனாக இருக்கவும்தான் அவருக்கு விளையாடும் அணியில் இடம் கிடைக்கிறது. இது சரியான வழி என்று எனக்குத் தெரியவில்லை!” என்று மிகக் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்!