“வெறும் 230 ரன்.. இத சேஸ் பண்ண முடியல.. பழைய கதையே நடக்குது.. முடியல வெறுப்பாகுது!” – புலம்பி தள்ளிய ஜோஸ் பட்லர்!

0
10625
Buttler

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 229 ரன்கள் கொடுக்க, அதை துரத்திய இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இந்தியா என தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.

- Advertisement -

இன்று இந்தியா அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்வியின் மூலமாக அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து முதல் அணியாக இங்கிலாந்து வெளியேறி இருக்கிறது.

உலகக்கோப்பை தொடருக்கு இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட பொழுது அந்த அணியின் பௌலிங் யூனிட் கொஞ்சம் பலவீனமாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்களால் கணிக்கப்பட்டது.

ஆனால் உலகக்கோப்பை தொடர் துவங்கி விளையாடிய பொழுது இங்கிலாந்து அணியின் பவுலிங் யூனிட் விட இங்கிலாந்து அணியின் பேட்டிங் யூனிட் மிக மோசமாக இருப்பது தெரிய வருகிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் தற்போதைய உலகக்கோப்பை போட்டி தோல்விகள், அந்த நாட்டில் மிகக் கடுமையான விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது. இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இதற்கு அடுத்து பெரிய மாற்றங்கள் உருவாவதற்கான சாத்தியங்கள் தென்படுகிறது.

தோல்விக்குப் பிறகு பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கூறும் பொழுது ” இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. முதல் பாதி ஆட்டத்தின் முடிவின்போது 230 ரன்களுக்கு இந்தியாவை கட்டுப்படுத்தி இருந்தோம். அப்போது நாங்கள் இதை துரத்த முடியும் என்று கற்பனை செய்தோம். ஆனால் மீண்டும் பழைய கதையே தொடர்ந்தது. இது எங்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை கொடுக்கிறது.

பொதுவாக நீங்கள் ஆட்டத்தை எந்த வழியில் விளையாட விரும்புகிறீர்களோ தைரியமாக அதே வழியில் தொடர்ந்து விளையாட வேண்டும். அதில் நீங்கள் எப்பொழுதும் உறுதியுடன் இருக்க வேண்டும். எங்களுடைய பிரச்சனை என்னவென்றால் நாங்கள் திட்டங்களை செயல்படுத்துவதில்தான் இருக்கிறது.

பந்துவீச்சாளர்கள் பவர் பிளேவில் ஒரு சிறந்த தொடக்கத்தை கொண்டு வந்தார்கள். எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவு ஸ்விங் கிடைத்தது. மைதானம் பீல்டிங் செய்யவும் நன்றாக இருந்தது.

ஆனால் நாங்கள் பேட்டிங் செய்த விதத்தில் பந்துவீச்சாளர்களின் உழைப்பை வீணடித்து விட்டோம். சாம்பியன்ஸ் டிராபிக்கு முதல் ஏழு இடங்களில் வரும் அணிகள்தான் தகுதி பெற முடியும் என்று எங்களுக்கு தெரியும். இன்னும் எங்களுக்கு விளையாடுவதற்கு போட்டிகள் இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!