நடப்பு 2024ஆம் ஆண்டின் மத்தியில் ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் 20 அணிகளைக் கொண்டு மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட இருக்கிறது.
நடக்க இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பை பெறுவதற்கு இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய ரேஸ் பலவீரர்களிடையே தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.
பேட்ஸ்மேன்கள் என்று எடுத்துக் கொண்டால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வெளிப்படையாகவே டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் வாய்ப்பில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
அதே சமயத்தில் ஜெய்ஸ்வால், கில் ருத்ராஜ், இசான் கிசான், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், கேஎல்.ராகுல் மற்றும் காயம் குணமடைந்தால் ரிஷப் பண்ட் என்று மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது.
இந்தப் போட்டியில் தற்பொழுது பெரிய அளவில் முன்னணியில் இருக்கக்கூடிய வீரராக 22 வயதான இளம் இடதுகை துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இருக்கிறார். அவருடைய பேட்டிங் ஃபார்ம் ஐபிஎல் தொடரில் சுமாராக அமைந்தால் கூட, அவரை டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்பும் அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது.
தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா “அவர் பேட்டிங் செய்த விதம், அவர் விளையாடிய வேகம் மற்றும் காட்டிய நம்பிக்கை, அவர் அதிரடியில் நல்ல முதிர்ச்சியை காட்டினார். அவர் போட்டியை விட்டு விலகவே இல்லை. அவர் அதை முன்னோக்கி கொண்டு சென்றார்.
அடிக்க வேண்டிய இலக்கில் அவர் ஒரு பெரிய சதவீதத்தை தனியாக அடித்தார். இது அவருடைய ரன் பசியை காட்டுகிறது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு மிகக் குறைவான டிக்கெட்டுகள் மட்டுமே இந்திய அணியில் இருக்கிறது என்று அந்த இளைஞனுக்கு தெரியும்.
டி20 உலகக் கோப்பை இந்திய அணையின் டிக்கெட்டை நீங்கள் பெற வேண்டும் என்றால், நீங்கள் இப்படி விளையாடினால் மட்டும்தான் முடியும்.நீங்கள் ஆட்டத்தை முடிக்க வேண்டியது அவசியமும் கூட” என்று அவர் கூறியிருக்கிறார்.