“என்னுடைய விரக்திகளில் ஒன்று இந்த இந்திய வீரர்.. அவரைத் தாண்டவே முடியல” – ஜோ ரூட் புலம்பல்

0
210
Root

தற்பொழுது இந்தியா இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானம் பெரும்பாலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்திருக்கிறது என்று புள்ளிவிவரம் கூறுகிறது.

இந்திய ஆடுகளங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதே வழக்கம். ஆனால் இதைத் தாண்டி இங்கு வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான நிலைமைகள் இருக்கும்.

- Advertisement -

இதில் ஒரு சிறிய வித்தியாசம் என்னவென்றால், ஆடுகளம் பெரிய அளவில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது. ஆனால் பந்துவீச்சாளர் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடிந்தால் தாக்கத்தை உருவாக்க முடியும்.

இந்த குறிப்பிட்ட மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய சிறந்த டெஸ்ட் செயல்பாடாக அது அமைந்திருக்கிறது.

இந்த நிலையில் நேற்று தன்னுடைய இரண்டாவது ஸ்பெல்லுக்கு வந்த பும்ரா கொஞ்சம் தேய்ந்த பந்தில் மிகச் சிறப்பான ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சை வெளிப்படுத்தி இங்கிலாந்தின் பெண் டக்கெட் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட்டுக்கு எப்பொழுதும் தலைவலி தரக்கூடிய ஒரு பந்துவீச்சாளராக இந்திய ஜஸ்பரீத் பும்ரா இருந்து வந்திருக்கிறார். நேற்றைய போட்டியிலும் ஜோ ரூட் இரண்டு ரன்கள் எடுத்திருந்தபோது எல்பி டபிள்யு முறையில் ரிவர்ஸ் ஸ்விங்கில் வெளியேற்றி அசத்தினார்.

இதுகுறித்து நேற்று பேசியிருந்த ஜோ ரூட் கூறும்பொழுது “அது என்னுடைய விரக்திகளில் ஒன்று. என்னால் அங்கு இருக்க முடியவில்லை. ஆனால் பும்ரா பெரிய அளவிலான திறமையுடன் மற்றும் வேகமும் கொண்ட அற்புதமான பந்துவீச்சாளர்.

இதையும் படிங்க : “இந்தியாவை ஒரு அணியால்தான் தோற்கடிக்க முடியும்.. அந்த அணி இப்ப இல்லை” – கங்குலி பேட்டி

ஒரு டெஸ்ட் போட்டியில் இருந்து நீங்கள் எதிர்பார்ப்பது இதைத்தான். விளையாட்டில் அது ஒரு பெரிய தருணம் ஆனால் அதை நான் தாண்ட முடியாமல் ஏமாற்றமடைந்தேன். எப்படியும் பும்ரா நான்கு இல்லை ஐந்து ஓவர்களுக்கு, அவர் மொத்தமாக சார்ஜ் செய்து நம் மீது எல்லா வகை பந்துகளையும் வீசுவார் என்பது நன்றாகவே தெரியும்” எனக் கூறியிருக்கிறார்.