“இந்தியாவை ஒரு அணியால்தான் தோற்கடிக்க முடியும்.. அந்த அணி இப்ப இல்லை” – கங்குலி பேட்டி

0
185
Ganguly

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி தற்பொழுது நான்காவது நாளுக்கு இன்று வந்திருக்கிறது. மூன்று நாட்களில் டெஸ்ட் போட்டிகள் முடிந்திருந்த நிலையில், நான்காவது நாளுக்கு வந்திருப்பது நல்ல அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

நேற்றைய நாளில் இந்திய அணி 190 ரன்கள் இங்கிலாந்து அணியை விட முன்னிலை பெற்று இருந்தது. இதன் காரணமாக இந்த ரன்களுக்குள் இங்கிலாந்து அணி சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அந்த அணியின் மூன்றாவதாக வந்த பேட்ஸ்மேன் போப் மிகச் சிறப்பாக விளையாடி 199 பந்துகளில் 148 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று இருக்கிறார். இதன் காரணமாக இங்கிலாந்து தற்பொழுது ஆறு விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் முன்னிலை எடுத்து இருக்கிறது. மேற்கொண்டு போட்டியின்று செல்வதை பொறுத்து அணிகளின் வெற்றி தோல்வி மாறும்.

இங்கிலாந்து அணியின் இந்த திடீர் பேட்டிங் எழுச்சி முதல் டெஸ்ட் போட்டியை சுவாரசியமான ஒன்றாக மாற்றி இருக்கிறது. பொதுவாக நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் 200 ரன்கள் எடுப்பதே பெரிய விஷயமாக பார்க்கப்படும். எனவே இந்திய அணிக்கு எவ்வளவு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது என்பது முக்கியம்.

இந்த நிலையில் இந்தியாவில் டெஸ்ட் வெல்வது குறித்து பேசி உள்ள கங்குலி “இந்தியா இந்த தொடரை 4-0 அல்லது 5-0 என்ற கணக்கில் வெல்லுமா? என்பதுதான் கேள்வி. ஆனால் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் தீர்க்கமானதாக இருக்கும். இங்கிலாந்து நன்றாக பேட்டிங் செய்திருந்தால் இந்த முதல் போட்டியை வென்று இருக்கலாம்.

- Advertisement -

இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை யாராலும் வெல்ல முடியாது. 240 ரன்கள் 350 இல்லை 400 ரன்கள் எடுத்திருந்தால் இங்கிலாந்துக்கு நல்ல வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் அந்த அணியால் அதைச் செய்ய முடியவில்லை.

இங்கிலாந்துக்கு இது மிகவும் கடினமான ஒரு தொடராக இருக்கும். கடந்த கால ஆஸ்திரேலிய அணியை தவிர இந்தியாவில் வேறு எந்த அணியாலும் தாக்கத்தை உருவாக்க முடியாது.

இதையும் படிங்க : “இங்கிலாந்து எவ்வளவு டார்கெட் கொடுத்தாலும் திருப்பி அடிப்போம்.. எங்க பிளானே வேற” – இந்திய பேட்டிங் பயிற்சியாளர் பேட்டி

கில் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற இளைஞர்கள் இந்தியா அணிக்காக விளையாட தகுதியானவர்கள். இந்தத் தொடர் அவர்கள் தங்களை நிரூபிக்க நல்ல வாய்ப்பு. ஜெய்ஸ்வால் அனைத்து வடிவ கிரிக்கெட் வீரராகவும் இருப்பார். காயத்திலிருந்து திரும்ப வரும் பொழுது ரிஷப் பண்ட் பெரிய வீரராக இருப்பார். ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் கில் போன்றவர்கள் தங்களை கொஞ்சம் மாற்றி அமைக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.