“ஒரு கால் போதும்.. இந்த பையனை டீம்ல எடுக்கலாம்!” – கவாஸ்கர் ஆச்சரிய பேச்சு!

0
234
ICT

இந்திய டி20 அணிக்கு 14 மாதங்கள் கழித்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் வந்துவிட்ட பிறகு, டி20 உலகக் கோப்பைக்கு இந்திய பேட்டிங் யூனிட்டை அமைப்பது குறித்து இருந்த தலைவலிகள் தீர்ந்து இருக்கிறது.

துவக்க ஆட்டக்காரர்கள், நடுவரரிசை ஆட்டக்காரர்கள், கடைசி வரிசை ஆட்டக்காரர்கள் என ஏறக்குறைய பேட்டிங் யூனிட்டில் இடம்பெறக்கூடிய பேட்மேன்கள் யார் என்பது குறித்தான தெளிவு வந்திருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இந்திய டி20 அணிக்கு விக்கெட் கீப்பர்கள் யார் என்பதில் ஒரு சிறிய தடுமாற்றம் இருப்பதாக தெரிகிறது. இப்போதைக்கு இஷான் கிஷான் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் டிக்கெட் கிருபர்கள் ஆக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு திரும்பிய கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செயல்பாட்டில் மிகச்சிறந்தவராக மாறியிருக்கிறார். அவர் இரண்டாம் நிலை விக்கெட் கீப்பர் போல இல்லாமல், முதல் நிலை விக்கெட் கீப்பர் போல செயல்படுகிறார்.

அடுத்து ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து வேகமாக குணமடைந்து வருகிறார். இவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேனாக மட்டும் டெல்லி அணிக்கு களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இவர் முழு உடல் தகுதி பெற்று, நல்ல பேட்டிங் ஃபார்மிலும் இருந்தால், டி20 உலகக் கோப்பைக்கு விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்வதில் இழுபறி நிலை நீடிக்கும்.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள கவாஸ்கர் கூறும் பொழுது “நான் கேஎல்.ராகுலை முழு நேர விக்கெட் கீப்பராக பார்க்கிறேன்.அதற்கு முன் நான் ஒன்று சொல்கிறேன், ரிஷப் பண்ட் ஒரு கால் குணமடைந்து இருந்தால் கூட, அவரை நேராக நான் தேர்வாளராக இருந்தால் அணிக்கு தேர்வு செய்வேன். காரணம் தனி ஆளாக அவரால் எந்த வடிவத்திலும் ஆட்டத்தை மாற்ற முடியும்.

இருப்பினும் ரிஷப் பண்ட் கிடைக்கவில்லை என்றால் கேஎல்.ராகுலை விக்கெட் கீப்பராக வைத்தால் நன்றாக இருக்கும். அவரை முதலில் அணிக்கு தேர்வு செய்து, பின்பு துவக்க ஆட்டக்காரர் ஆகவோ மிடில் வரிசையிலோ அல்லது பினிஷர் ஆகவோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்போது அவர் ஒரு ஆல் ரவுண்டராக இந்திய அணிக்கு தரமான விக்கெட் கீப்பராக கிடைத்திருக்கிறார். இன்னொரு பக்கத்தில் ஜிதேஷ் சர்மா பந்தை அடித்து விளையாட கூடியவராக இருக்கிறார். இப்படி வீரர்களுக்கிடையே நல்ல போட்டி இருப்பது நல்ல விஷயம்” என்று கூறியிருக்கிறார்.